விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஜீ தமிழில் “GOAT” ஸ்பெஷல்.. அட இவ்ளோ இருக்கா?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பண்டிகை தினங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்விக்கவும் ஜீ தமிழ் தவறுவதில்லை. அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 7-ம் தேதி ஜீ தமிழில் சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் (GOAT) படத்தின் சிறப்பு நிகழ்ச்சி வரை என பல கொண்டாட்டங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
அவை என்னென்ன? அதன் ஒளிபரப்பு நேரம் என்ன என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் வாங்க. காலை 9 மணி முதல் 10:30 மணி வரை கலைமாமணி சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை விநாயகர் சதுர்த்தி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதுமட்டுமின்றி சரிகமப குழுவினர், டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள், உங்களது பேவரைட் பிரபலங்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்தி சங்கமம் பல ரவுண்டுகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்ட உள்ளது.
அடுத்ததாக மதியம் 1:30 மணி முதல் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஸ்டார் திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நமது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோட் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த பிரபலங்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், படம் உருவான விதம் பாடல்கள் உருவான விதம் என பலரும் அறிந்திடாத பல சூப்பரான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளை உங்கள் ஜீ தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications