டான்ஸ் ஜோடி டான்ஸ் வெற்றியாளர் யார் தெரியுமா? அடேங்கப்பா பரிசு தொகை இத்தனை லட்சங்களா?
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்று மாலை பைனல் போட்டி முடிவடைந்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி ஆன டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.

அதில் மொத்தம் பத்து போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்தனர். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் செமி பினாலே ரவுண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.

இதில் முதல் ஜோடியாக ஹேமா சுரேஷ் பைனலுக்கு தேர்வாகி இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பைனலில் மேலும் நான்கு ஜோடிகள் தேர்வாகி இருந்தனர். அதில் சுரேஷ்- ஹேமா, இப்ராஹிம்- அஷிதா, நவீன்- அக்ஷதா, கௌரி- விவேக், ஜான் எட்வின்- ரிஷா ஜேக்கப் போன்றோர் இருந்தனர். இவர்களுடைய நடன திறமையால் நேற்றைய பைனல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், நடன இயக்குனரும், தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கலந்து கொண்டதோடு பல திரையுலக நட்சத்திரங்களும் பைனல் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 டைட்டில் வின்னராக அக்ஷதா- நவீன் ஜோடி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் இவர்கள் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஜோடிக்கு 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அக்ஷிதா மற்றும் இப்ராஹிம் ஜோடி இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது இடத்தை கௌரி மற்றும் விவேக் ஜோடியும் பிடித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications