கெட்டிமேளம்: அஞ்சலிக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் மகேஷ்! வெற்றிக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலியின் போன் நம்பரை வாங்கி கொண்ட மகேஷ் அவளை வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தார் சார்பில் கேக் கட் செய்து அவளது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரகுராம், கேசவன் ஆகியோர் மாப்பிள்ளை என்ன சொன்னார்? என்ன செய்தார் என்று கேட்க அதெல்லாம் அவங்க பெர்சனல் என அஞ்சலியின் அண்ணிகள் துரத்தி விடுகின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

இதை தொடர்ந்து அண்ணிகளும் லட்சுமியும் மாப்பிள்ளை என்ன செய்தார் என்று கேட்டு கலாய்க்கின்றனர். பிறகு அஞ்சலி கவினுக்கு இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் மறந்துட்டியா என வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதை கேட்ட கவின் அவளுடனான நினைவுகளை நினைத்து பாட்டிலால் கையை அறுத்து கொள்ள நண்பர்கள் கட்டு போட்டு விடுகின்றனர்.

அடுத்து மகேஷ் போன் செய்ய வீட்டில் உள்ளவர்கள் மாப்பிள்ளை போன் பண்றாரு பேசு என பேச வைக்க இருவரும் நைட் முழுவதும் பேசுகின்றனர், அஞ்சலி அடுத்த நாள் அசந்து தூங்க எல்லாரும் அவளை கலாய்க்கின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அடுத்ததாக கவின் கையில் காயத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்க அப்பா வரதராஜன் என்னாச்சு என கேட்டு கோபப்பட்டு சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார். இங்கே அஞ்சலியின் திருமண பத்திரிகையான டிசைன்களை பார்த்து கொண்டிருக்க அஞ்சலி வெளியே வர அவளையே செலக்ட் செய்ய சொல்கின்றனர்.

விலை கம்மியானதை செலக்ட் செய்ய விலையை பத்தியெல்லாம் கவலைப்படாதே என்று சொல்கின்றனர். தொடர்ந்து அஞ்சலி ஒரு டிசைனை செலக்ட் செய்து கொடுக்கிறாள். கடையில் இருந்து ஆள் வந்து அட்வான்ஸ் கேட்க அண்ணன்கள் ரெண்டு பேரும் நைசாக நழுவி கொள்கின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

இதையடுத்து வெற்றி வெளியே வந்திருக்க எம்.எல்.ஏ ப்ரோக்கரை வரவைத்து வெற்றிக்கு நல்ல பெண் பார்க்க சொல்கிறார். மேலும் பொண்ணு அமைச்சர் வீட்டு பொண்ணா இருக்கனும் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து வெற்றியின் அம்மா பொண்ணு என் பையனை விட 10 வயசு கம்மியா இருக்கணும்.. ஜாதக பொருத்தம் சரியாக இருக்கனும் என கண்டிஷன்களை லிஸ்ட் போடுகிறார்.

மேலும் வெற்றியின் அப்பா போன் செய்து போட்டோ கேட்க வெற்றி போட்டோ தான் வீட்டில் இருக்குமே என்று சொல்ல நல்ல போட்டோவா வேண்டும்.. பொண்ணு பார்க்க கொடுக்கணும் என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான்.

zee Tamil Chayasingh Gettimelam serial

இதனை தொடர்ந்து வெற்றி ஸ்ரீகாந்த் வீட்டருகே வர அவனது நண்பர்கள் வந்து போட்டோ கேட்க வெற்றி அடித்து ஓட விடுகிறான், இங்கே மகேஷ் போன் செய்து கல்யாணத்திற்கு ஷாப்பிங் போக கார் அனுப்பி வைப்பதாக சொல்கிறான். கார் வீட்டிற்கு வர எல்லாரும் ஷாப்பிங் கிளம்பி செல்கின்றனர். பிரம்மாண்டமான துணிக்கடையில் டிரஸ் எடுக்க மகேஷ் ஏற்பாடு செய்திருப்பதை பார்த்து எல்லாரும் பிரம்மித்து போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+