ஜீ தமிழ் “கோல்டன் அவார்ட்ஸ்”.. யாருக்கெல்லாம் விருது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சவங்களும் இருக்காங்க
சென்னை: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை தொலைக்காட்சி நிறுவனம் ஊக்கப்படுத்த மறைப்பதில்லை, 2024 தொடங்கியதும் ஜீ தமிழ் விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்திய நிலையில் தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது.

மிக பிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் 1 சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் ஆக்ஷன், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்தி, நினைத்தேன் வந்தாய் தொடருக்காக கணேஷ் வெங்கட் ராம், தமிழா தமிழா ஷோவை தொகுத்து வழங்கும் ஆவுடையப்பன் உள்பட ஏராளமானோருக்கு விருதுகள் கிடைத்தன. இயக்குனர் ஹரி, மிஸ்கின், சுந்தர் சி, சீமான், தமிழிசை சௌந்தராஜன், மிர்னாலினி, மீனாட்சி, சங்கீதா, விடிவி கணேஷ், ரித்விகா, ஜி.வி பிரகாஷ், அருண் ராஜா காமராஜா, கதிர் என பல நடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விருது விழா நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் முதல் பாகம் மே 1-ம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் விருது வாங்கினார்கள்? உங்க பேவரைட் நட்சத்திரங்கள் என்ன பேசினார்கள்? என்பதை எல்லாம் அறிந்து கொள்ள கோல்டன் மூமென்ட்ஸ் 2024 நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பாருங்க.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications