கோல்டன் மூமென்ட்ஸ் ஹை லைட்ஸ்.. கார்த்திக் இடம் கேட்கப்பட்ட கேள்வி! வெற்றி யாருக்கெல்லாம்ன்னு பாருங்க
சென்னை: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் கொண்டாடிய தருணங்களை கொண்டாடும் வகையில் கோல்டன் மூமென்ட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மே தினத்தில் ஒளிபரப்பானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மிக பிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் 1 சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் ஆக்ஷன், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்தி, நினைத்தேன் வந்தாய் தொடருக்காக கணேஷ் வெங்கட் ராம், தமிழா தமிழா ஷோவை தொகுத்து வழங்கும் ஆவுடையப்பன் உள்பட ஏராளமானோருக்கு விருதுகள் கிடைத்தன. இயக்குனர் ஹரி, மிஸ்கின், சுந்தர் சி, சீமான், தமிழிசை சௌந்தராஜன், மிர்னாலினி, மீனாட்சி, சங்கீதா, விடிவி கணேஷ், ரித்விகா, ஜி.வி பிரகாஷ், அருண் ராஜா காமராஜா, கதிர் என பல நடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

முதல் பாகத்தில் பல அழகான தருணங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில் இரண்டாவது பாகத்தில் பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் போல்ட்நெஸ், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் ஆக்ஷன், இதயம் தொட்ட தொடர் என பல கேட்டகரியின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதயம் தொட்ட தொடராக அண்ணா சீரியல் கொண்டாடப்பட்டுள்ளது.
அடுத்து நடிகர் கார்த்திக் ராஜ்க்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை வைத்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் கார்த்திக் அதிரடி பதில் கொடுத்து ரசிகர்களை மகிழ வைத்துள்ளார். இப்படி பல அழகான தருணங்களுடன் ஒளிபரப்பாக உள்ள கோல்டன் மூமென்ட்ஸ் பார்ட் 2 நிகழ்ச்சியினை காண தவறாதீர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications