Zee Tamil Pongal 2026: ஜீ தமிழில் ஜாலியான பொங்கல் விருந்து.. அதுவும் இத்தனை படங்கள் வருது!
சென்னை: பொங்கல் என்றாலே சந்தோஷம், குடும்பம், பாரம்பரியம். அந்த கொண்டாட்டத்தை இன்னும் சிறப்பாக்க ஜீ தமிழ் இந்த ஆண்டு பொங்கலுக்கு பிரம்மாண்டமான சிறப்பு நிகழ்ச்சிகளையும், ரசிகர்கள் விரும்பும் திரைப்படங்களையும் வரிசையாக கொண்டு வந்துள்ளது. ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (மாட்டுப் பொங்கல்) ஆகிய இரண்டு நாட்களிலும், வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய முழு நாள் பொழுதுபோக்கு ஜீ தமிழில் காத்திருக்கிறது.

தைப்பொங்கல் - ஜனவரி 15 (வியாழன்)
பொங்கல் திருநாள் காலை 9 மணிக்கு, கலைமாமணி சுகி சிவம் தலைமையில் நடைபெறும் சிறப்புப் பட்டிமன்றத்துடன் கொண்டாட்டம் தொடங்குகிறது. தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் சிந்தனைத் தூண்டும் கருத்துகள் நிறைந்த இந்த பட்டிமன்றம், பொங்கல் நாளுக்கான சிறந்த தொடக்கமாக அமைகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு, நடிகர் சூரி நடிப்பில் வெளியான குடும்பத் திரைப்படமான 'மாமன்' ஒளிபரப்பாகிறது. உறவுகளின் மதிப்பையும் பாசத்தின் ஆழத்தையும் சொல்லும் இந்த படம், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க ஏத்த ஒன்றாகும்.
மதியம் 1.30 மணிக்கு, காளி வெங்கட் மற்றும் தர்ஷன் நடித்த ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படமான 'ஹவுஸ் மேட்ஸ்' ஒளிபரப்பாகிறது. நகைச்சுவையும் மர்மமும் கலந்த இந்த படம், மதிய நேர பொழுதுபோக்குக்கு சரியான தேர்வாக இருக்கும்.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'பராசக்தி' திரைப்படக் குழுவினரின் பிரத்யேக நேர்காணல் ஒளிபரப்பாகிறது. இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் படக்குழுவினர், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் திரைக்குப் பின்னணியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் உச்சமாக, மாலை 6 மணிக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் நடித்த 'மதராஸி' திரைப்படம் உலகத் தொலைக்காட்சி முதன்முறையாக ஒளிபரப்பாகிறது. ஆக்ஷன், மாஸ் மற்றும் உணர்ச்சிகள் கலந்த இந்த படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும்.
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 16 (வெள்ளி)
மாட்டுப் பொங்கல் தினம் காலை 9 மணிக்கு மற்றொரு சிறப்புப் பட்டிமன்றத்துடன் தொடங்குகிறது. குடும்ப ரசிகர்களுக்கான இந்த நிகழ்ச்சி, சிந்தனைக்கும் பொழுதுபோக்குக்கும் ஏற்றதாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை, ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் 'தமிழா தமிழா' சிறப்பு பகுதி ஒளிபரப்பாகிறது. தமிழக கலாச்சாரம், மக்களின் உணர்வுகள் மற்றும் சமூக விவாதங்கள் இதில் இடம்பெறுகின்றன.
மதியம் 12.30 மணிக்கு, விஜய் நடித்த மெகா ஹிட் திரைப்படமான 'The Greatest of All Time (GOAT)' ஒளிபரப்பாகிறது. பிரசாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த ஆக்ஷன் படம், ரசிகர்களுக்கு பெரும் திருப்தியை தரும்.
பொங்கல் கொண்டாட்டங்களை நிறைவு செய்யும் வகையில், மாலை 6 மணிக்கு 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படமான 'காந்தாரா சாப்டர் 1' உலகத் தொலைக்காட்சி முதன்முறையாக ஒளிபரப்பாகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படம், தெய்வ வழிபாடு மற்றும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதையைக் காட்சிப்படுத்துகிறது.
இந்த பொங்கல், வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லாமல், வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் இணைந்து கொண்டாட ஜீ தமிழ் முழுமையான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது. ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த கலர்ஃபுல் பொங்கல் கொண்டாட்டத்தை ரசிக்கலாம்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications