ஆசையுடன் கழற்றிக் கொடுத்த விஷ்ணு.. வேண்டாம்னு நிராகரித்த ஆயிஷா.. செம!
சென்னை: டிஆர்பி கூட்டுவதில் இப்போது கடும் போட்டா போட்டியே நடந்து கொண்டுள்ளது. சேனல்கள் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து தக்க வைக்க படாதபாடு பட்டு வருகிறார்கள்.
அந்த மாதிரி தான் இப்போ ஜீ தமிழிலும் அந்த சேனலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் 26 பேரை ஒன்றாக மூன்று நாள்கள் ஒரே வீட்டில் இருக்க வைத்து அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இது ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டுவருவதுதான் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்குவதற்காக ஓட்டெடுப்பு நடந்து கொண்டு இருக்கிறது.

விருது விழா
ஜீ தமிழில் நடக்கும் சீரியல்கள் அனைத்திலும் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆக அனைவரும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியாக தற்போது ஜீ தமிழ் களமிறங்கி இருக்கிறது . இதில் அனைவரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறார்களாம். அந்த வீட்டிற்குள் நடிப்பு இல்லாமல் தங்களுடைய உண்மையான குணத்தோடு இவர்கள் இருப்பதால் இதனை பார்த்து நீங்கள் ஓட்டு போட்டால் போதும் என்று பிரமோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் போல
ஏற்கனவே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதே மாதிரி தான் போய்க் கொண்டு இருக்கிறது. அதில் 100 நாள்கள் ஒரே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது மூன்று நாட்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று நாட்கள் வீட்டுக்குள் இருந்து செய்ததை வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக போகிறார்களாம். பல ரசிகர்கள் இது எப்போது ஒளிபரப்பப்படும் என்று ஆர்வமாக காத்திருப்பதாகக் கூறி வருகிறார்கள்.

குசும்புத்தனம்
சில நெட்டிசன்கள் இது என்ன பிக் பாஸ் நிகழ்ச்சியை காப்பியடித்து பண்ணுகிறீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள். இருந்தாலும் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரென்று தெரியாத பலரும் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் இந்த ஜீ தமிழ் நிகழ்ச்சியில் எல்லாம் எங்களுக்கு தெரிந்த முகங்கள் தான் அதனால் நாங்களும் ஆர்வமாக தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆயிஷாவின் பிடிவாதம்
அந்த வீட்டிற்குள் சத்யா சீரியலில் நடிக்கும் விஷ்ணு - ஆயிஷா ஜோடியின் காதல் மற்றும் பாசப் பொழிவையும் புரோமோ வில் வெளியிட்டு வருகிறார்கள் . இதை பார்த்ததும் சத்யா சீரியல் ரசிகர்கள் அங்கேயும் உங்க சண்டையை ஆரம்பித்து விட்டீர்களா. அதுவும் பாசமான சண்டை என்று ரசித்து வருகிறார்கள். அந்த வீட்டிற்குள் சக்தியாவாக நடிக்கும் ஆயிஷா குளிரில் இருப்பதை விஷ்ணுவால் தாங்க முடியவில்லையாம். அதனால் தான் அணிந்திருந்த ஜெர்க்கின்ஸை கழட்டி கொடுக்கிறார் .

எதுக்கு இப்ப சண்டை
ஆயிஷா அதை வேண்டாம் நான் மேனேஜ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் திருப்தி அடையாத விஷ்ணு பூவே பூச்சூடவா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மதனின் ஜெர்க்கின்ஸை கழட்டி கொடுக்கச் சொல்கிறார். உடனே மதன் கழட்டி கொடுத்தாலும் வாங்கவில்லை. அதனால் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனால் கோபத்தில் விஷ்ணு இருக்கிறார். இவர்கள் சண்டையை பார்த்ததும் சத்யா சீரியல் ரசிகர்கள் உங்கள் சண்டையை அங்க போயும் ஆரம்பிச்சிட்டீங்களா என்று இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க என்று ரசித்து வருகிறார்கள்.

சபானாவின் சிணுங்கல்
அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் சபானா அனைவருக்கும் பிடித்த ஒரு செல்ல மருமகள்தான். இவருடைய க்யூட்டான ட்ரெண்டான பூவே பூச்சூடவா ரேஷ்மா மற்றும் யாரடி நீ மோகினி சீரியல் வெண்ணிலாவாக நடக்கும் நட்சத்திரா எல்லோரும் ஒன்று சேர்ந்து ஜாலியாக என்ஜாய் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சீரியலில் இல்லாமல் வெளியே இருந்தாலே ஜாலியாக மாற்றி மாற்றி கிண்டல் பண்ணி கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜாலி சண்டை
அதிலும் ஷபானா அடுத்தவரை ரொமான்ஸ் சொல்லி பேசிக்கிட்டு இருக்கும்போது அவரை ரேஷ்மா ஒரே வார்த்தையில் செம்பருத்தியில் நடக்கும் ரொமான்ஸ் பற்றி பேசியதும் சபானா அப்படியே ஆப் ஆகி அந்த மாதிரி அதையெல்லாம் நீ பேசக்கூடாது அதையெல்லாம் நீ பேசக்கூடாது என்று செல்லமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களின் சண்டையை பார்த்ததும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

நல்லாதாய்யா இருக்கு
சீரியல்களில் தனித்தனியாக இதுவரைக்கும் பார்த்துக்கொண்டிருந்த இவர்களை இனி மொத்தமாக ஒரே வீட்டிற்குள் பார்க்கும்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு நல்ல ஒரு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறது. அதிலும் பிக் பாஸ் க்கு போட்டியாக இது நடந்து கொண்டிருந்தாலும் இது ஒரு மணி நேரமே ஒளிபரப்ப போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. பொருத்திருந்து பார்த்தாதான் தெரியும் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களா இல்ல இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வருத்தப் படப் போகிறார்களா என்று.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications