விருதுகளுடன் களைகட்டும் மகாநடிகை ஷோ.. இறுதி கட்டத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ மகாநடிகை. புதுமுக நடிகர்களுக்கான தேடலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஆர்.ஜே விஜய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வர தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகை அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பரபரப்பான பல வித்தியாசமான ரவுண்டுகளுடன் ஒளிபரப்பாகி மக்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. இந்த ரவுண்டில் போட்டியாளர்களுக்கு கலகலப்பான விருதுகளை வழங்கி உருக வைத்துள்ளனர்.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த காமெடி கலாட்டா சுற்றாக இந்த செலிப்ரேஷன் ரவுண்ட் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே மகாநடிகை நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மகாநடிகை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் கிடைத்த இந்த மேடையை சரியாக பயன்படுத்தி மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் மகாநடிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரகுநாத் என்பவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சமயத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டேட் பிரச்சனையால் தொடர்ந்து மகாநடிகை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஐஸ்வர்யாவின் திறமை அடுத்தகட்டத்துக்கு செல்வதை புரிந்து கொண்ட நிகழ்ச்சி குழுவினர் அவரது வளர்ச்சிக்கு வழி கொடுத்து வாழ்த்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரகுநாத்தின் ரியல் திறமையை உலகறிய செய்த மகாநடிகை நிகழ்ச்சி குழுவிற்கும் சேனலுக்கும் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக சரிகமப நிகழ்ச்சி மூலமாக போட்டியாளர் தர்ஷினியின் சொந்த ஊரில் பஸ் வசதியை ஏற்படுத்தி தர ஜீ தமிழின் சரிகமப முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications