புத்தாண்டு தினத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்.. இந்த திரைப்படங்களும் வருகிறது
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அதே போல் ஜீ தமிழ் பண்டிகை தினங்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறுவதில்லை.
அந்த வகையில் வரும் புத்தாண்டு தினத்திலும் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது ஜீ தமிழ். காலை 8 மணி முதல் என்னனென்ன நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காலை 8 மணிக்கு: ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான " தி கிரேட் இந்தியன் கிச்சன் " என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ராகுல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கை வீட்டிற்குள் மட்டுமே சுழன்றடிக்க ஒரு கட்டத்தில் அவள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து சாதிக்க முயற்சிக்கிறாள். ஐஸ்வர்யாவின் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
காலை 10 மணிக்கு: இந்த திரைப்படத்தை தொடர்ந்து காலை 10 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் ஜோதிடம் பார்ப்பது அவசியமா? ஆடம்பரமா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், பர்வீன் சுல்தானா, சாந்தாமணி என பலர் பங்குபெறும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
காலை 11:30 மணிக்கு: பட்டிமன்றத்தை தொடர்ந்து காலை 11:30 மணிக்கு ஜீ 5 தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்களின் கவனத்தை ஈர்த்த அயலி வெப் சீரிஸ் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. மூட நம்பிக்கையால் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் படிப்பில் சாதிக்க துடிக்கும் இளம் பெண்கள் கட்டுப்பாடுகளை உடைத்து இருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் இந்த வெப் சீரிஸ்.

மாலை 6 மணிக்கு : தொடர்ந்து மாலை 6 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா சாவ்லா என பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரதர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. நீதி, நேர்மை என வாழும் ஜெயம் ரவியால் அவனது அக்கா குடும்பம் இரண்டாக உடைகிறது. அவனது குடும்பத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதையெல்லாம் கடந்து ஜெயம் ரவியின் குடும்பம் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தது? என அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் தான் பிரதர்ஸ்.
புத்துணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சிறப்பு பட்டிமன்றம் என ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதை பார்த்து இந்த புத்தாண்டை கொண்டாட தயாராகுங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications