Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த ஜீ தமிழ்! ஒரு முடிவோட தான் இருக்காங்க போல! சரிகமபவில் இந்த வாரம் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் - சீசன் 5 நிகழ்ச்சி, இந்த வாரம் முழுக்க விஜய் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் கொண்டாட்டமாக மாறப்போகிறது. ஏற்கனவே குழந்தைகள் பாடும் பாடல்களுக்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கும் இந்த நிகழ்ச்சி, இப்போது விஜய்யின் ஹிட் பாடல்களுடன் இன்னும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சரிகமப என்றாலே ஜீ தமிழின் அடையாளமான ஒரு நிகழ்ச்சி. பல ஆண்டுகளாக இசை திறமைகளை கண்டெடுத்து, அவர்களுக்கு ஒரு பெரிய மேடையை கொடுத்த நிகழ்ச்சி இது. அதில் ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் என்றால், குழந்தைகளின் இனிமையான குரல்களால் குடும்ப ரசிகர்களையும் சேர்த்து கட்டிப்போடும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

Zee Tamil SaReGaMaPa Vijay

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5

இந்த சீசன் 5, ஆரம்பத்திலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வாரம் முழுக்க விஜய்யின் பாடல்களை அர்ப்பணித்திருப்பது நிகழ்ச்சிக்கு கூடுதல் வலுவை கொடுத்திருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்கள் பாடப்போகும் பாடல்கள் அனைத்தும் விஜயின் சூப்பர் ஹிட் பாடல்கள்.

குட்டி குழந்தைகள் குரலில் "விஜய் பாடல்" என்றாலே அந்த மேடையில் வேற லெவல் வைப்தான். அதனால் தான், இந்த வார எபிசோடுகள் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதோட நிற்கல... இந்த வாரத்தை இன்னும் ஸ்பெஷலாக்கும் விஷயம், விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் நண்பர்கள், அவருடன் நேரடியாக திரைப்படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். விஜய் உடன் வேலை செய்த அனுபவங்கள், அவர் படப்பிடிப்பில் எப்படி இருப்பார், பாடல் காட்சிகளின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் என பல விஷயங்களை அவர்கள் மேடையிலேயே பகிர்ந்திருக்கிறார்கள்.

ஜனநாயகன் நெருக்கடி

ஒவ்வொரு ஹிட் பாடலுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அந்த கதைகளை நேரடியாக விஜய்யின் நண்பர்களிடமிருந்தே கேட்கும் வாய்ப்பு கிடைப்பதால், இந்த வாரம் சரிகமப வெறும் இசை நிகழ்ச்சியாக இல்லாமல், விஜய் ரசிகர்களுக்கான ஒரு நினைவுப் பயணமாக மாறப்போகிறது.

இதற்கிடையில், விஜயின் ஜனநாயகன் படம் தொடர்பாக தொடர்ந்து சில நெருக்கடிகள் இருந்து வருகிறது. படம் தொடர்பான சில சட்ட சிக்கல்கள், வெளியீட்டு தாமதம் குறித்த பேச்சுகள் என ரசிகர்களிடையே கவலை கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படியான சூழலில், விஜயை மையமாக வைத்து ஜீ தமிழ் எடுத்துள்ள இந்த முயற்சி, ரசிகர்களுக்கு ஒரு வகையான ரிலீஃப் ஆகவே பார்க்கப்படுகிறது.

விஜய் ஸ்பெஷல்

ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை ஜி5 நிறுவனம் வாங்கி, அதனை பிரமாண்டமாக ஒளிபரப்பி விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த தொடர்ச்சியாகவே, இப்போது ஜீ தமிழ் தனது சேனலில் விஜய் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இந்த ஸ்பெஷல் வாரத்தை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய்யின் ஹிட் பாடல்

இதோடு சேர்ந்து, விஜயின் அரசியல் பயணத்திலும் நேற்று ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி, அதுவும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் விஜய் தொடர்பான செய்திகள் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சரிகமப விஜய் ஸ்பெஷல் வாரம் ரசிகர்களுக்கு இன்னும் முக்கியமாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் "இந்த வாரத்துக்காகவே வெயிட்டிங் பா", "விஜய் பாடல் வாரமா? கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டோம்" என்ற கமெண்ட்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன. ஜீ தமிழ் எடுத்துள்ள இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+