மகா நடிகை செமி பைனலில் நடந்த சம்பவம்.. முதல் ஆளாக இறுதி போட்டிக்கு முன்னேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநடிகை நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. நடிப்பு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சாமானிய பெண்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் சிறந்த மேடையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது மகாநடிகை சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்கி வரும் நிலையில், நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்வாசிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களின் நடிப்புத் திறமையை மதிப்பீடு செய்து வருகின்றனர்.
மகா நடிகை நிகழ்ச்சி
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்டுகள் மூலம் காதல், காமெடி, எமோஷன், கோபம், நடனம் உள்ளிட்ட நடிப்புக்குத் தேவையான பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒளிபரப்பான செமி பைனல் சுற்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பரபரப்பாக நடைபெற்றது.

முதல் பைனலிஸ்ட்
இந்த போட்டியின் முடிவில், ராயனுடன் இணைந்து சிறப்பாக நடித்த காவியா, முதல் பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அசத்தலான நடிப்பு மற்றும் தொடர்ந்து வெளிக்காட்டும் திறமையின் மூலம் இறுதிப்போட்டிக்கான முதல் இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.
நெகிழ்ச்சி பேட்டி
இந்த வெற்றியைத் தொடர்ந்து காவியாவுக்கு ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய Zee தமிழ் தொலைக்காட்சிக்கும், தன்னை தேர்வு செய்து ஊக்குவித்த நடுவர்களுக்கும், போட்டி முழுவதும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து காவியா சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இறுதிப்போட்டியில் காவியா என்ன மாதிரியான நடிப்பால் ரசிகர்களை கவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் இந்த மேடையில் திருநங்கை சூர்யா குட்டி வைத்த வேண்டுகோள் முதல்வர் விஜய் வரைக்கும் சென்றது பலராலும் பாராட்டப்பட்டது.
திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்குவதற்கு ஒரு இருப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்திருந்தார். அப்போது சிறப்பு விருந்தினரக வந்த அருண் காமராஜ் இந்த வேண்டுகோள் முதல்வரிடம் சொல்லப்படும் என்று சொல்லியிருந்தார். அதேபோல சமீபத்தில் பட்ஜெட் உரையின் போது திருநங்கைகளுக்கு மாவட்டத்தில் விடுதி கட்டி தரப்படும் என்று அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
