சரிகமபா திவினேஷ் சொன்ன விஷயம்.. நடுவர் செய்த உதவி, உடைந்து அழுத தந்தை.. பாராட்டும் மக்கள்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் பாடி பிரபலமடைந்த திவினேஷ் தன்னுடைய நீண்ட நாள் கனவு குறித்து மேடையில் பேசியிருந்தார். அதைக் கேட்டதும் நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ் யாரும் எதிர் பார்க்காத செயலை செய்து இருக்கிறார். அதே நேரத்தில் திவினேஷ் தந்தை மேடையிலேயே கண்கலங்கி அழுதிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக பலர் பிரபலமடைந்திருக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் திறமையை ரியாலிட்டி நிகழ்ச்சியில் காட்டி பலர் உலகம் எல்லாம் தெரியும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதுபோன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களும் கலந்து கொண்டு வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ரியாலிட்டி நிகழ்ச்சி
அதுபோலத்தான் சரிகமப நிகழ்ச்சியில் அறிமுகமான திவினேஷுக்கு முதல் வாரமே அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். குழந்தையாக இருக்கும் திவினேஷ் 70ஸ் பாடல்கள் பலவற்றையும் பாடி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். பழைய பாடல்களில் இத்தனை தத்துவம் இருக்கிறதா? என்று இந்த தலைமுறையினரும் உற்று ஆராய்ந்து கேட்கும் வகையில் இவருடைய பாடல்கள் மெல்லிய குரலால் கேட்பவர்களின் மனதை வருடுகிறது.
போட்டியாளர் திவினேஷ்
அதே நேரத்தில் இந்த பாடல் பாடினால் நன்றாக இருக்கும், இந்த பாடலை திவினேஷ் முயற்சி செய்ய வேண்டும் என்று நேயர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். தினேஷ் இதுவரைக்கும் அதிகமான பழைய பாடல்களை பாடி இருக்கிறார். சோகப் பாடல்கள் கூட இவருடைய குரலில்
கரைந்து கேட்பவர்களின் காதை குளிர வைத்து விடுகிறது. இந்த நிலையில் தான் திவினேஷிடம் இத்தனை நாட்களாக நேயர்களின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தீர்களே உங்களுடைய ஆசை என்னவென்று விஜே அர்ச்சனா கேட்டிருந்தார்.
திவினேஷ் ஆசை
அதற்கு திவினேஷ் சிறிது நேரம் யோசித்து என்னுடைய அப்பாவிற்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். வண்டியா இது என்ன புது விஷயம் சொல்றீங்களே என்று அர்ச்சனா கேட்டிருந்தார். அதற்கு என்னை தினமும் இங்கே கூட்டிக்கொண்டு வருவதால் அப்பாவால் சரியாக நேரத்திற்கு வேலைக்கு போக முடியவில்லை அதனால் வேலைக்கு வேண்டாம் என்று நிறுத்திட்டாங்க, இப்போ அப்பா வேலைக்கு போகல வீட்லதான் இருக்காங்க. அதனால் அப்பாவுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்கணும் இதுதான் என்னுடைய ஆசை அதை சீக்கிரமா கொடுக்கணும் என்று சொல்லி இருந்தார்.
தந்தையின் தியாகம்
இதை கேட்டதும் நடுவராக இருக்கும் ஸ்ரீநிவாஸ் உங்க அப்பாவுக்கு வண்டி வாங்க எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்க, அதை சொல்ல கூட தெரியாமல் தினேஷ் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அப்பாவிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு திவினேஷ் அப்பா நான் சொந்த வண்டி வைத்தது இல்லை. பால் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன், திவினேஷை பாடுவதற்கு கூட்டிட்டு வந்து வீட்டிற்கு போகும்போது இரவு லேட் ஆகி விடுகிறது.
பாடகர் ஸ்ரீநிவாஸ் செய்த உதவி
இரவு நேரத்தில் தினமும் கண்டிப்பாக பால் வண்டி எடுத்தாக வேண்டும் என்னால் சில நாட்கள் போக முடியாமல் இருப்பதால் நீங்க நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்தால் போதும் என்று சொல்லி நிறுத்திவிட்டு வேற ஆள் போட்டு விட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் ஸ்ரீநிவாஸ் உங்களுக்கு நான் இப்போது 25 ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன். வண்டி வாங்குவதற்கு ஆறு லட்சம் ஆகும் என்று சொல்கிறார்கள் உங்க மகன் ஆசைப்பட்ட மாதிரி உங்களுக்கு வண்டி நாங்க வாங்கி தருகிறோம் என்று சொல்ல, அதை கேட்டு தினேஷ் தந்தை கண் கலங்கி இருந்தார்.
மகனின் ஆறுதல்
அப்பொழுது திவினேஷ் நான் இருக்கேன் அப்பா உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திவினேஷை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications