ஜீ தமிழில் இந்த வாரம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்! களைகட்ட காத்திருக்கும் மேடைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ போன்றவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெர்பாமன்ஸ் ரவுண்ட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பாடலுக்கு ஏற்ப மாறுவேடம் அணிந்து பாடி அசத்தினார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் திருவிழா சுற்று ஒளிபரப்பாக உள்ளது. திருவிழா காலங்களில் களைகட்டும் பாடல்களை தேர்வு செய்து போட்டியாளர்கள் பாடி அசத்த உள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

அதே போல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் சீசன் 3. விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மார்ச் 1-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் இன்ட்ரோ சுற்று ஒளிபரப்பானதை தொடர்ந்து இந்த வாரம் ரி-கிரியேஷன் ரவுண்ட் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது சூப்பர் ஹிட்டான பாடல்களை தேர்வு செய்து அதே ஸ்டெப், அதே கெட்டப்பில் நடனமாடி அசத்த உள்ளனர். மேலும் இந்த வாரம் முதல் போட்டியாளர்களுக்கு இடையேயான மோதலும் தொடங்குகிறது.

அதுபோல விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கோமாளியாக வந்து கலக்கிய கெமி, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரை பாபா மாஸ்டர் மற்றும் மணிமேகலை இருவரும் கலாய்த்த ப்ரோமோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த ப்ரோமோவை பார்க்கும் ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாபா மாஸ்டர், மணிமேகலை என இருவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இப்போது கெமியும் வந்து விட்டார் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பஞ்சமி மற்றும் கதிர் உடைய டான்ஸ் பார்த்து பாராட்டுவதற்காக சிறப்பு விருந்தினர் ஒருவரும் வந்திருக்கிறாராம் ஆனால் அது யார் என்று ப்ரோமோவில் காட்டப்படவில்லை.

இதனால் ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என இரண்டு ரியாலிட்டி ஷோக்களும் சூப்பர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+