தமிழ் புத்தாண்டுக்கு ஜீ தமிழில் இருக்கும் சர்ப்ரைஸ்.. டியூட் முதல் இத்தனை படம் வருகிறது!
சென்னை: தமிழர் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும், நல்ல நினைவுகளையும் தரும் நாள்தான் தமிழ் புத்தாண்டு. அந்த நாளை குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஜீ தமிழ் இந்த ஆண்டு ஒரு பெரிய சர்ப்ரைஸுடன் வந்திருக்கிறது.
இந்த முறை சாதாரண நிகழ்ச்சிகள் இல்ல... காலை எழுந்த நேரத்திலிருந்து இரவு வரை முழுக்க முழுக்க பொழுதுபோக்காக இருக்கும்படி, ஒரு முழு நாள் ஸ்பெஷல் அட்டவணையை செட் பண்ணிருக்காங்க.

காலை நேரம்
புத்தாண்டு நாளை ஒரு நல்ல விஷயத்தோட தான் தொடங்கணும் இல்லையா? அதற்காக காலை 8 மணிக்கே ஒரு ஸ்பெஷல் பட்டிமன்றம் ரெடியாக இருக்கு.சுகி சிவம் தலைமையில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்தில், வாழ்க்கை, பழக்கம், கலாசாரம் எல்லாம் கலந்த சுவாரஸ்யமான விவாதங்கள் நடக்கப் போகிறது. குடும்பமா உட்கார்ந்து கேட்கும் மாதிரி ஒரு நல்ல ஆரம்பம்.
பிளாக்பஸ்டர் மூடில் மதியம்
அதுக்கப்புறம் 9:30 மணிக்கு ஆரம்பிக்குது ஒரு பெரிய விஷயம். காந்தாரா: சாப்டர் 1 ஒளிபரப்பாகிறது. இந்த படம் சாதாரண படம் இல்ல... மர்மம், கலாசாரம், கிராம வாழ்க்கை, அதோட சேர்ந்து மாஸ் காட்சிகள் - எல்லாம் கலந்து இருக்கும். திரையரங்கில் மிஸ்ஸானவங்க வீட்டிலேயே ஒரு பெரிய அனுபவம் பெறலாம்.
மதிய நேரம்
12:30 மணிக்கு "பூக்கி" என்ற படம் முதல் முறையாக டிவியில் வருகிறது. பூக்கி படத்தில் தனுஷா, அஜய் திஷன் நடிச்சிருக்காங்க. இது ஒரு லைட் லவ் ஸ்டோரி மாதிரி இல்ல... இப்போதைய காலத்து ரிலேஷன்ஷிப்ஸ் எப்படி இருக்குது, அதுல வரும் குழப்பங்கள் என்னன்னு ரியலாக காட்டும் படம்.
மாலை
மாலை 3 மணிக்கு "தமிழா தமிழா" ஸ்பெஷல் எபிசோடு. தமிழா தமிழா எப்போதுமே சமூக விஷயங்களை நேராக பேசும் ஒரு நிகழ்ச்சி. இந்த புத்தாண்டு ஸ்பெஷல் எபிசோட்ல கூட, மக்கள் வாழ்க்கையை தொட்ட ஒரு முக்கியமான விவாதம் இருக்கும்.
இரவு
மாலை 5 மணிக்கு ஆரம்பிக்குது இன்னொரு ஹைலைட் "டியூட்". வசூலில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்திருக்காங்க.
இது முழுக்க முழுக்க யூத் பேஸ்ட் படம். லவ், ஃப்ரெண்ட்ஷிப், காமெடி எல்லாமே கலந்த ஒரு எண்டர்டெயின்மென்ட் பாக்கேஜ். நாள் முழுக்க இருந்த கொண்டாட்டத்தை, இந்த படம் செம்மையாக முடிச்சு வைக்கும்.
அடிக்கிற வெயிலுக்கு இந்த தமிழ் புத்தாண்டு நாளை வீட்டிலேயே ஒரு திருவிழா மாதிரி அனுபவிக்கணும்னா, ரிமோட்டை வேற எங்கும் திருப்ப தேவையே இல்லை. காலை பட்டிமன்றம் முதல் இரவு பிளாக்பஸ்டர் படம் வரை, ஒரு முழு நாள் பக்கா என்டர்டெயின்மென்ட் ரெடி. இன்று ஏப்ரல் 14 - குடும்பத்தோட சேர்ந்து கொண்டாடுங்க.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications