மனைவி வெறுத்தாலும்.. சொந்த மகன் எதிர்த்தாலும்! ஜீ தமிழில் விஜய்க்கு கொடுத்த ஹைப்! பின்னணி இதுதானா?
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலால் மட்டுமல்லாமல் அவருடைய குடும்ப பஞ்சாயத்தாலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கொடுத்த ஹைப் தான் சோசியல் மீடியாவில் அதிகமான விமர்சனங்களை சந்திக்க வைத்து இருக்கிறது.
விஜய்க்காக ஜீ தமிழில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் சப்போர்ட் செய்து கொண்டே இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ரிலீஸ் உரிமத்தை ஜீ தமிழ் பெற்று அதை ஒளிபரப்பு செய்திருந்தனர். அதற்குப் பிறகு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி இருக்கின்றனர்.

ஜீ தமிழ் நிகழ்ச்சிகள்
அதாவது சரிகமபா போன்ற பாடல் நிகழ்ச்சிகளிலும் கூட விஜய்யின் பாடல் ரவுண்டு என்று ஒரு டாஸ்க் கொடுத்து அந்த வாரம் விஜய் பாடல்களோடு, விஜய்யின் நண்பர்கள் மற்றும் அவரை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் பற்றி பெருமையாக பேசி இருந்தனர். இது விஜய் ரசிகர்களை கவருவதற்காக ஜீ தமிழ் எடுத்த முயற்சியா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த படம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது என்பதை சொல்வதற்காக போடப்பட்ட ப்ரோமோவில் சொன்ன கண்டன்டு தான் இப்போ சோசியல் மீடியாவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கோட் படம் ஒளிபரப்பு
அதாவது கோட் படத்தின் கதைப்படி ஹீரோ விஜய்யின் மனைவி சினேகா அவரை சந்தேகப்படுவார். அதேபோல அவருடைய மகன் விஜய்யை எதிர்த்து அவரை அழிக்க துடிப்பார். இது படத்தின் மைய கதை. அதேபோல விஜய் உடைய நிஜ வாழ்க்கையிலும் அவருடைய மனைவி விவாகரத்து வழக்கு கொடுத்திருக்கிறார். அதுவும் நாளை ஏப்ரல் இருபதாம் தேதி இந்த வழக்கின் விசாரணை வர இருக்கிறது. அதற்கு முன்பு விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீ தமிழ் வசனம்
அதுபோல விஜயின் மகள் மற்றும் மகன் இருவருமே விஜய்க்கு எதிராக அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் சொந்த வாழ்க்கையையும் கோட் படத்தின் மையக்கருவையும் வைத்து ஜீ தமிழில் கோட் படத்தின் ப்ரோமோவில், "மனைவி வெறுத்தாலும்.. மகன் எதிர்த்தாலும் மக்களுக்காக.. மக்களை காப்பாற்ற மக்கள் நாயகன் வருகிறார். தளபதி வெற்றிக்கொண்டான் நடித்த கோட் திரைப்படம் மறுபடியும் ஒளிபரப்பு என்று அதில் பேசப்பட்டு இருக்கிறது.
இதை பார்க்கும் ரசிகர்கள் பலர் எலக்சனுக்காக வாக்கு சேகரிக்க இது புது ஐடியாவா? மக்களை காப்பாற்ற விஜய் வருகிறார் என்று சொல்கிறார்களே... அது அவருடைய சொந்த குடும்பத்தை எதிர்த்து மக்களை காப்பாற்ற தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறார்களா? அல்லது இது விஜயை கலாய்க்கிறார்களா? என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வரவில்லை அதற்கு முன்பே சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது என்ற வருத்தம் அவருடைய ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும் நிலையில் அவருடைய படங்கள் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவில்லையே என்று வருத்தமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு ஜீ தமிழ் தொடர்ந்து சப்போர்ட் பண்ணுவது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறதாம்.
-
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி











Click it and Unblock the Notifications