மணிமேகலையை கோர்த்து விட்ட வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலத்திடம் வசமா சிக்கிட்டாரே! ஐயோ பாவம்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலையை, நடுவராக இருக்கும் வரலட்சுமி போட்டியாளரிடம் மாட்டிவிட்டு இருக்கிறார். அதனால் விஜய் டிவி பிரபலமான கெமி மணிமேகலையை பாடாய்படுத்தி எடுத்து இருக்கிறார்.
காலேஜ் படிக்கும் போது சன் மியூசிக்கில் வேலைக்கு சேர்ந்த மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவர் ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மணிமேகலை மற்றும் ஹுசேன் தம்பதிக்கு விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

டான்ஸ் நிகழ்ச்சியில் ரன்னர்
அந்த நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிறகு ரன்னராக தேர்வாகி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சி உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை மணிமேகலை தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
திடீர் விலகல்
முதல் சீசனில் தொடங்கி மூன்று சீசன்கள் வரைக்கும் அவர் கோமாளியாக கலந்து கொண்டார். எல்லா வாரமும் ஒவ்வொரு கட்டத்தில் வந்து ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால் நான்காவது சீசனில் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். பிறகு ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தார்.
பிரியங்காவோடு சண்டை
ஆரம்பத்தில் நிகழ்ச்சி நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது ஆனால் கடைசியில் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு பிரியங்காவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவர் பெயரை குறிப்பிடாமலே மறைமுகமாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பிறகு விஜய் டிவியை விட்டு வெளியே வந்த மணிமேகலை இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு இருக்கிறார்.
புதிய தொகுப்பாளர்
இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் விஜய் தான் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது விஜய் மற்றும் மணிமேகலையின் காம்போ ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் நடுவராக பாபா மாஸ்டர் மற்றும் நடிகை சினேகா இருக்கிறார்கள். இவர்களோடு நடிகை வரலட்சுமியும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முதல் வாரத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மாட்டி விட்ட வரலட்சுமி
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலையை வரலட்சுமி போட்டியாளரிடம் போட்டுக் கொடுக்கிறார். அதாவது இந்த வாரம் பழைய பாடல்களுக்கு அதே ஸ்டெப் மாறாமல் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடும் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் ரொமான்ஸ் பாடல்களும் இடம் பிடித்திருக்கிறது. அதுவும் கட்டிபுடி கட்டிபுடிடா பாடலுக்கு வேற லெவலில் போட்டியாளர்கள் ரொமான்ஸ் செய்து டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.
பாவம் மணிமேகலை
அதை பார்த்து சினேகா இந்த பாடலுக்கு இரண்டு ஆண்கள் டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் என்று கேட்க, நடிகர் கதிரும் இன்னொரு போட்டியாளரும் அதற்கு டான்ஸ் ஆடுகிறார்கள். பிறகு வரலட்சுமி இந்த பாட்டுக்கு மணிமேகலையும் கெமியும் டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் என்று கேட்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த கெமி இப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு இருக்கிறார் அவர் மணிமேகலையை தூக்கிக்கொண்டு சென்று இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அப்போது மணிமேகலையை அவர் கீழே போட்டு உருட்டி புரட்டி எடுக்க, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications