பக்தி பெயரில் பாடாய்படுத்துறாங்க! கதறிய இளைஞருக்கு அம்மா கொடுத்த பதிலடி! தமிழா தமிழாவில் செம சம்பவம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. சாமானிய மனிதர்களில் ஒருவராக ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான டாபிக்குடன் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் பக்திமான் பெற்றோர்கள் Vs பகுத்தறிவு பிள்ளைகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஆன்மீகத்தை பெரிதாக நம்பும் பெற்றோர்கள் ஒருபுறம் ஆன்மீகம் என்ற பெயரில் தங்களை வைத்து அலப்பறைகளை பேசும் பிள்ளைகள் ஒரு புறம் என விவாதம் மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு இளைஞர் காலேஜில் இருக்கும் போது போன் பண்ணி வர சொன்னாங்கனு போனால் வேப்பிலையை கட்டி விட்டு கையில் தீ சட்டியை கொடுத்து தூக்க சொல்றாங்க.. தீயில் இறங்க சொல்றாங்க. அதனால் கை பொத்து போது.. கால் பொத்து போது.. வேணும்னா இவங்க தூக்க வேண்டியது தானே என்று ஆதங்கத்தை கொட்டுகிறார்.
இந்த சமயத்தில் இடையில் புகுந்த அவரது அம்மா இவ்வளவு பேசுறியே தங்கம்.. 5 வயசு வரைக்கும் பேசாமல் இருந்த.. இவ்வளவு தெய்வத்திற்கு வேண்டிக்கிட்டதால் தான் இன்னைக்கு இவ்வளவு பேசுற.. இங்க வந்து சவடால் அடிச்சிட்டு இருக்க என்று சொல்ல, அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்களும் அந்த அம்மா தான் ஹைலைட்டே என்று கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் இந்த வார தமிழா தமிழா சிறப்பான சம்பவமான எபிசோடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல கடந்த வாரத்தில் விவாகரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு நபர் பெண்கள் குறித்து தவறாகவும், தரக்குறைவாக பேசும் போது சற்று யோசிக்காமல் ஆவுடையப்பன் அந்த நபரை வெளியேற்றி இருந்தார். இது பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
அதுபோல விவாகரத்திற்கு பிறகு பெண்கள் படும் கஷ்டங்களும் வேதனைகளையும் பல பெண்கள் கண்ணீரோடு எடுத்துக்கூறி இருந்தனர். அதுபோல இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும் விவாகரத்தால் கஷ்டம் இல்லை ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு கஷ்டப்படுகிறார்கள் என்று சில ஆண்கள் தங்களுடைய வேதனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் விவாகரத்தில் பெண்களுக்கு அதிகமான சலுகைகள் இருப்பதால் சில ஆண்கள் தவறு செய்யாமல் பாதிக்கப்படுவதும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தெரியவந்தது. போன வாரம் உணர்வு ரீதியாக விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த வாரம் பக்தியை வைத்து விவாதம் நடைபெறுகிறது என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications