அப்பாடா ஒரு வழியா திரையின் திருவிழா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் திரையின் திருவிழாவை ஒரு வழியா கொண்டாடி முடிச்சுட்டாங்க.

ஜீ தமிழ் டிவியில் அதை ஒளிபரப்பும் தேதி வருகிற 12ம் தேதியாம்.11ம் தேதியில் இருந்தே பொங்கல் விடுமுறைக்காக கொண்டாட்டம் ஆரம்பம் என்பதால் இதுவும் கொண்டாட்ட நிகழ்ச்சிதான்.

ஒட்டுமொத்த திரையுலகமே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்து உள்ளது ஜீ தமிழ் டிவிக்கு கிடைத்துள்ள பெருமை என்று சொல்லலாம்.

 ஜீ சினி விருதுகள்

ஜீ சினி விருதுகள்

ஜீ டிவி புதிதாக சினிமா ஒளிபரப்ப என்று புதிய சானல் ஒன்றைத் துவங்க உள்ள நேரத்தில், சினிமா கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஜீ சினி விருதுகள் அறிவித்தது. இந்த விருதுகள் வழங்குவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை ஜீ தமிழ் டிவி. நடிகை சுகாசினி, இயக்குநர் கரு பழனியப்பன் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவை நியமித்து விருதுக்கானவர்களை தேர்வு செய்து அறிவிக்கும் பொறுப்பை கொடுத்தது.

 பொது மக்கள்

பொது மக்கள்

அத்துடன் விட்டு விடாமல் பொது மக்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கி சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகை என்று கேட்டு அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. நாள் கணக்கில் என்று இல்லாமல் திரையின் திருவிழா என்று அறிவித்து மாதக் கணக்கில் இதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு மிக நிதானமாக செயல்பட்டு விழாவை மிக அருமையாக நடத்தி முடித்து இருக்கிறது ஜீ தமிழ் டிவி.

 விழாவுக்கு நயன்

விழாவுக்கு நயன்

விழாவுக்கு நடிகை நயன்தாரா வந்ததுதான் பெரிய அதிசயம். தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வராத நயன், ஜீ தமிழ் டிவியின் திரையின் திருவிழா நிகழ்ச்சிக்கு தனியாக ஆஜராகி இருந்தார். இதனால் விக்னேஷ் சிவனுடன் பிரேக்கப் என்கிற சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். பின்னர் இல்லை.. இல்லை என்று கூற வேண்டியதாயிற்று.

 என்ன காரணமோ

என்ன காரணமோ

வழக்கமாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு அதுவும் தங்களது சானல் நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதற்குத்தான் முன்னுரிமை வழங்கும். ஆனால், ஜீ தமிழ் டிவி வெள்ளித்திரையை கொண்டாடி இந்த திரையின் திருவிழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறது. உலக நாயகன் உட்பட அனைத்து கலைஞர்களும் ஆஜராகி உள்ளனர்.

ஜீ தமிழ் டிவியின் நோக்கம் என்னவோ, ஆனால், விழா இனிதாக நடந்து முடிந்து ஜீ தமிழ் டிவிக்கு பெருமை சேர்த்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+