சாவியுடன் காருக்குள் சிக்கிய 2 வயது குழந்தை.. 45 நிமிடம் போராடிய போலீஸ்.. பரவும் வீடியோ காட்சி!
திருவனந்தபுரம்: காருக்குள் சென்று விளையாடிய 2 வயது குழந்தை எதிர்பாராத விதமாக லாக் செய்துள்ளான். இதனால், காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த குழந்தையை 45 நிமிட போராட்டத்துக்கு பின் தீ அணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். 2 வயது குழந்தை ஆரவ் காருக்குள் சிக்கிக் கொண்டதும் பின்னர் போலீசார் குழந்தையை மீட்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு காருக்குள் சென்று விளையாடிய 2.5 வயது குழந்தை எதிர்பாராத விதமாக லாக் செய்துள்ளான். இதனால், காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிய குழந்தையை தீ அணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்த விவரம் வருமாறு:- கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் நந்து. இன்று காலை தனது காரை வீட்டில் வைத்து கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொது அங்கு வந்த நந்துவின் இரண்டு வயது மகன் ஆரவ், விளையாட்டுத்தனமாக காரின் ரிமோட் கீயை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.
அதே கீயுடன் காருக்குள் சென்று விளையாடிய ஆரவ், காரை லாக் செய்துவிட்டான். காருக்குள் சிக்கிய 2 வயது குழந்தைக்கு எப்படி வெளியே வர வேண்டும் எனத் தெரியவில்லை. தனது பிள்ளை காருக்குள் சிக்கியதை பார்த்ததும் துடித்து போன நந்து காரின் டூப்ளிகேட் கீ இருக்கிறதா என வீடு முழுக்க தேடி பார்த்துள்ளார். ஆனால் காரின் கீ கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். குழந்தை ஆரவிடம் பேச்சு கொடுத்தபடியே தங்கள் கையில் இருக்கு வயர்லெசை காட்டி ரிமோட்டில் உள்ள கீயை அழுத்துமாறு சொன்னார். கிட்டத்தட்ட 45 நிமிடங்களாக போராடிய போலீசார் ஒருவழியாக குழந்தை ஆரவை பத்திரமக மீட்டனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட பிறகுதான் அருகில் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்த தந்தை நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தற்பொது 2 வயது குழந்தை ஆரவ் காருக்குள் சிக்கிக் கொண்டதும் பின்னர் போலீசார் குழந்தையை மீட்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெற்றோர் குழந்தைகளை காருக்கு அருகே விளையாடும் போது மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications