கேரளா அமைச்சர்கள் பட்டியல்.. விடி சதீசன் கேபினட்டில் 14 பேர் புதுமுகங்கள்.. யார் யாருக்கு இடம்?
திருவனந்தபுரம்: கேரளாவில் வி.டி. சதீஷன் தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ள நிலையில் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களின் விவரங்களை முதல்வராக பதவியேற்கும் சதீசன் அறிவித்துள்ளார். இதில் 14 பேர் புதுமுகங்கள்.
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, மொத்தமுள்ள 140 இடங்களில் 102 இடக்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் பதவிக்கு வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சராக வி.டி.சதீசனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

கேரளா முதலமைச்சராக வி.டி. சதீஷன் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு கேரள ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை காலை சதீசன் உடன் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களில் ஐந்து பேர் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள். வி.டி. சதீசன், ஞாயிற்றுக்கிழமை லோக்பவனில் கேரள ஆளுநரிடம் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.
இந்த அமைச்சரவையில் மான்ஸ் ஜோசப் (கேரள காங்கிரஸ்-ஜோசப்), ஷிபு பேபி ஜான் (புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி), அனூப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ்-ஜேக்கப்) மற்றும் சி.பி. ஜான் (கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவையில் 14 பேர் புதிய முகங்கள்.
கேரள அமைச்சர்கள் பட்டியல்
ரமேஷ் சென்னிதாலா
சன்னி ஜோசப்
கே.முரளீதரன்
மோன்ஸ் ஜோசப்
ஷிபு பேவி ஜான்
அனூப் ஜேக்கப்
சிபி ஜான்
ஏபி அனில்குமார்விஷ்ணுநாத்
ரோஜி ஜான்
பிந்து கிருஷ்ணா
லிஜூ
சித்திக்
துளசி
ஜனீஸ்
பி.கே. குன்ஹலிகுட்டி
ஷம்சுதீன்
கே எம் ஷாஜி
பிகே பஷீர்
அப்துல் கபூர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
திருவான்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகராகவும், ஷனிமோல் உஸ்மான் துணை சபாநாயகராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.யு.எம்.எல் கேரள மாநிலக் குழுவின் தலைவரும், தேசிய அரசியல் குழுவின் தலைவருமான சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கோழிக்கோட்டைச் சேர்ந்த பரக்கல் அப்துல்லா என்ற அமைச்சர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று கூறினார். எந்த அமைச்சர் மாற்றப்படுவார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட இருக்கும் துறைகள் குறித்து ஆலோசனைகள், இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னர் அந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு












Click it and Unblock the Notifications