நடிகை பாலியல் வன்கொடுமை.. நடிகர் திலீப்பின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்த கேரள அரசு!
திருவனந்தபுரம்: தென்னிந்திய திரை உலகை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்நிலையில் இந்த விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மற்றும் சிலரை விடுவித்து எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு, டிசம்பர் 8 அன்று உத்தரவு வழங்கியது. இந்நிலையில் இதனை எதிர்த்து, கேரள அரசு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தனது மனுவில், விசாரணை நீதிமன்றம் குறைத்த மற்ற குற்றம் சாட்டப்பட்டோரின் தண்டனையை அதிகரிக்கவும் அரசு கோரியுள்ளது. இவ்வழக்கு தொடர்பான பல டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கேரள அரசு வாதிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்களில், 'பல்சர்' சுனி என அழைக்கப்படும் சுனில் என்.எஸ்., தனது 20 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக் கோரினார். தான் ஏற்கனவே எட்டாண்டுகள், அதாவது மொத்த தண்டனையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சிறையில் கழித்துவிட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நடிகையின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர், திரைத்துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல் சம்பவங்கள் குறித்து விசாரிக்க 'ஹேமா கமிட்டியை' கேரள அரசு அமைத்தது. இந்த கமிட்டி கூறிய தகவல்கள் அனைத்தும் மொத்த மலையாள திரைத்துறையையே உலுக்கியது. இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகி பொறுப்பிலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications