2ஆவது திருமணம் செய்த 8 நாட்களில் 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. கேரளாவில் சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ணனூரில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் , கண்ணனூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஸ்ரீஜா (38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (42) என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

5 people including 3 children commits suicide inside the house in Kerala

இதையடுத்து ஷஜி வீட்டில் ஸ்ரீஜா தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் வீட்டில் சடலமாக கிடந்தனர். குழந்தைகள் உள்பட ஸ்ரீஜா, ஷஜி ஆகிய 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டனர். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளை தூக்கிட்டு கொன்றுவிட்டு இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2ஆவது திருமணம் செய்த 8 நாட்களில் 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+