திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேச்சிக்கு எந்தா வயசு அம்பதோ.. அல்லா, 52.. சரி போய்க்கோ.. சபரிமலையில் கலகல!

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் இருமுடி அணிந்து சென்ற பெண்ணை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து அவருக்கு வயது 52 ஆவதற்கான ஆதாரத்தை காட்டியவுடன் அவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10- 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் வன்முறை, கலவரங்களில் ஈடுபட்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாத்திமா

    பாத்திமா

    இது போல் குடும்பத்தினருடன் பம்பை வரை வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண்ணை மிரட்டி திருப்பி அனுப்பினர். அது போல் பாத்திமா என்ற பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் நைஷ்டிக பிரம்மசாரியான ஐயப்பனை காண வரக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.

    இருமுடி

    இருமுடி

    இந்த பிரச்சினைகளுக்கு நடுவே பேராசிரியை ஒருவர் இருமுடி ஏந்தி கொண்டு வரிசையில் சென்று கொண்டிருந்தார். அவரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு திரும்பி போகுமாறு கூறினார்.

    போராட்டக்காரர்கள்

    போராட்டக்காரர்கள்

    பின்னர் அவர் தனக்கு 52 வயதாகிறது. எனவே எனக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்றார். அதற்கு அவர்களோ வயது சான்றிதழை காட்டுமாறு கூறினர். அப்பெண்ணும் தான் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டை காண்பித்தவுடன் அவரை போராட்டக்காரர்கள் அனுமதித்தனர்.

    இருண்டதெல்லாம்

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் 52 வயது பெண்ணிடம் ஆதார் அட்டையை காட்ட சொல்லி பின்னர் போய்கோ என்று போராட்டக்காரர்கள் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது. இதனால் போராட்டக்காரர்கள் ஏமார்ந்ததை நினைத்து ஒரு பிரிவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    A 52 year old woman forced to prove her age in Sabarimala temple as the protesters doubted age.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X