திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு மத்தியில் ஷிகெல்லா வைரஸ்.. கேரளாவின் கோழிக்கோட்டை ஆட்டி படைக்கும் பரிதாபம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா எனும் பாக்டீரியா தொற்றால் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 11 வயது குழந்தை கடந்த வாரம் இறந்தார்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பாக்டீரியா கேரளாவில் பரவி வருகிறது. அதற்கு ஷிகெல்லா என பெயரிடப்பட்டுள்ளது.

6 cases of Shigella infection in Kerala, one dead

இது பாக்டீரியா வகையை சேர்ந்தது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்படும் நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி ஆகியவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. எனினும் சிலருக்கு அறிகுறியில்லாமலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வயிற்றுப்போக்கு உள்ளிட்ட மேற்கண்ட அறிகுறிகள் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் அசுத்தமான உணவு, தண்ணீரில் இருந்து பரவுகிறது. கோழிக்கோட்டில் பரவிய இந்த நோய் கோட்டபரம்பு வார்டு வரை பரவியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை முடிவு செய்யும் - எல். முருகன் புது குண்டுதமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை முடிவு செய்யும் - எல். முருகன் புது குண்டு

வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம்களை அமைக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளின் மலத்தை எடுத்து சோதனை செய்ததில் அவர்களுக்கு ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்னும் 20 பேருக்கு இந்த வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 20 பேரில் 4 பேர் மட்டுமே பெரியவர்கள், மற்ற அனைவரும் குழந்தைகள் ஆவர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது குழந்தை கடந்த வாரம் பலியாகிவிட்டார்.

English summary
Six cases of Shigella infection in Kerala's Kozhikode, one dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X