கேரளாவில்... நெஞ்சை உறைய வைக்கும் விபத்து... வீட்டின் மீது பேருந்து பாய்ந்து 7 பேர் பலி!
காசர்கோடு: கேரளாவில் காசர்கோடு அருகே பேருந்து நிலை தடுமாறி சாலையோர வீட்டின் மீது பாய்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் பினராயி விஜயன், காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கர்நாடக மாநிலம் கள்ளியாவில் இருந்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பணத்தூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் திருமண கோஷ்டியினர் 65 பேர் இருந்தனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் காசர்கோடு மாவட்டம் பரியாரம் என்ற இடத்தில் பந்தூர்-சுலேயா நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய பேருந்து, சாலையோரம் இருந்த வீட்டின் மீது பாய்ந்தது.

இந்த கொடூர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து விழுந்ததில் அந்த வீடும் பலத்த சேதம் அடைந்தது. நல்லவேளையாக விபத்து நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் பினராயி விஜயன், காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications