குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி குண்டு... தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி குண்டை காணிக்கை செலுத்தக் கூடிய உண்டியலில் போட்டுவிட்டு சென்றது யார் என்பது பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்டியலில் விழுந்த காணிக்கையை எண்ணிய போது, அதில் துப்பாக்கி குண்டும் கிடந்தது கண்டறியப்பட்டது.

புகழ்பெற்ற கோவில்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சென்று வருகின்றனர். துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துவது இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும்.

துப்பாக்கி குண்டு
குருவாயூர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது மாதம்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்தவகையில் அக்டோபர் மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, பணத்துடன் துப்பாக்கி குண்டும் இருந்ததால் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சிசிடிவி கண்காணிப்பு
இதையடுத்து அந்த குண்டை ஆய்வு செய்ததில் அது, 9 எம்.எம். ரக கைதுப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு எனத் தெரியவந்துள்ளது. அதை யார் உண்டியலில் போட்டார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அச்சுறுத்தல்
குருவாயூர் கோவிலுக்கு ஏற்கனவே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் எந்நேரமும் ஈடுபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications