Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில் துப்பாக்கி! மதரஸா போகும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தந்த தந்தை.. குலுங்கிய கேரளா.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வெறிநாய் கடிக்கு பயந்து தனது குழந்தைகளுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் இப்போது மக்களை தெரு நாய்கள் கடிக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய்கள் தெருவில் அதிக அளவில் உலவி வருகின்றன. இவற்றை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த நாய்களை தடுக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நாய்கள் கடித்த காரணத்தால் சமீபத்தில் 12 வயது சிறுவன் பலியானார்.

நாய்கள்

நாய்கள்

இதையடுத்து அந்த நாயை கொன்று பொதுமக்கள் நடு ரோட்டில் தொங்கவிட்டனர். இந்த நாய்கள் மக்களை கடிப்பதால் அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் தெரு நாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாய்களை கொல்லாமல், சாகும் வரை கூண்டில் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

அதேபோல் மற்ற வெறி நாய்களுக்கு வேக்சின் போடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக துரிதமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நாய் பிரச்சனை மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் பல சாலைகளில் காணப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கேரளா

கேரளா

இதுவரை பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மட்டும் கேரளாவில் 21 பேர் பலியாகி உள்ளனர். அந்த அளவிற்கு கேரளாவில் நிலைமை மோசமாகி உள்ளது. இந்த நிலையில்தான் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பாதுகாப்பிற்கு செல்ல துவங்கி உள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளை நாய் தாக்க கூடாது என்பதால் பாதுகாப்பிற்கு சென்றுள்ளனர். குழந்தைகளைதான் அதிகமாக நாய்கள் தாக்குவதால் பெற்றோர்கள் இப்படி பாதுகாப்பிற்கு செல்கின்றனர்.

குழந்தைகள்

குழந்தைகள்

இந்த நிலையில்தான் கசார்கோட்டில் மதரஸாவில் படிக்கும் தங்கள் வீட்டு குழந்தைகள், மற்றும் நண்பர்கள் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அப்பா ஒருவர் சென்றுள்ளார். நாய்கள் வந்தால் சுடுவதற்காக இவர் கையில் துப்பாக்கி ஒன்றை வைத்து இருக்கிறார். ஏர் கன் வகை துப்பாக்கியை வைத்துக்கொண்டு இவர் சென்றுள்ளார். இவரின் பெயர் சமீர் என்று தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பின் பக்கம் நடந்து வர முன் பக்கம் இவர் துப்பாக்கியோடு நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த சம்பவம் கேரளாவை உலுக்கி உள்ளது. இவர் மீது கலவரத்தை தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. எனக்கு வேறு வழி இல்லை, குழந்தைகள் பயப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இப்படிதான் செல்ல வேண்டும். நான் இப்படி சென்றால் குழந்தைகள் தைரியமாக வருகிறார்கள் என்று கூறியுள்ளார். இவர் துப்பாக்கியை தூக்கி வருவதால், இவரின் வீட்டிற்கு தினமும் 15 குழந்தைகள் வந்து, அவரின் பாதுகாப்பில் பள்ளி செல்வதாக கூறப்படுகிறது.

லைசன்ஸ்

லைசன்ஸ்

இவரிடம் துப்பாக்கி லைசன்ஸ் இல்லை. ஆனால் இதுவரை இவர் எந்த நாயையும் சுட்டதில்லை. பாதுகாப்பிற்கிற்காக மட்டுமே இவர் ஏர் துப்பாக்கி வைத்துள்ளார் . இவரின் இந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் தேவை இல்லை என்று சமீர் கூறி உள்ளார். இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் போலீசார் இவர் விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+