மவுண்ட்பேட்டன் காலத்திலிருந்து இருக்கு தொடர்பு.. இந்திய கடற்படை கொடியும், சுவாரசிய பின்னணியும்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்தியக் கடற்படையின் புதிய கொடியை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இனி வரும் காலங்களில் கடற்படை தரப்பில் இந்த கொடிதான் பயன்படுத்தப்படும்.

இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற கடற்படை கொடி எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்கிற வரலாறு குறித்து தெரியுமா.

கடற்படை மட்டுமல்லாது ராணுவம், விமானப்படை உள்ளிட்டவற்றின் கொடிகள் வடிவமைப்பில் 'மவுன்ட்பேட்டன் பிரபுவின்' பங்கும் இதில் உள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கொடி

மாற்றியமைக்கப்பட்ட கொடி

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் நாட்டின் ராணுவம் மற்றும் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் கொடிகளில் பிரிட்டிஷ் அரசின் கொடிகளின் பிரதிபலிப்பே இருந்திருக்கிறது. ஆனால் இதனையடுத்து 1950ல் இந்தியா குடியரசாக மாறிய பின்னர் இந்த கொடிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் 4 முறை செய்யப்பட்டுள்ளன. முதன் முறையாக கடந்த 1950 ஜனவரி 26ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து 2001ல் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் இரண்டாவது முறையாக கொடி மாற்றியமைக்கப்பட்டது.

புதிய கொடி

புதிய கொடி

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் வெளியிட்டுள்ள புதிய கொடியில், கொடியின் மேல்புற இடதுபக்கத்தில் தேசியக் கொடியும், எண்கோண சட்டமும், அதற்கு தங்கநிற வண்ணமும் தரப்பட்டுள்ளது. அந்த எண்கோணம் அடர்நீலத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது. அதில் தங்கநிறத்தில் தேசிய சின்னம், சத்தியமே ஜெயதே என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நங்கூரத்தின் மீது தேசிய சின்னம் அமரவைக்கப்பட்டுள்ளது போன்று கொடி அமைக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்


கடற்படையின் கொடியில் உள்ள எண்கோணம் என்பது 8 திசைகளையும் குறிக்கிறது. நங்கூரம் அடையாளம் என்பது, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கொடியில் உள்ள அடர்நீலம் வண்ணம், இந்திய கடற்படை கடற்பரப்பில் வல்லமைவாய்ந்ததை குறிக்கிறது. கொடியில் உள்ள எண்கோணத்துக்கு இரு பார்டர்கள் கொடுக்கப்பட்டது என்பது சத்ரபதி சிவாஜி ராஜமுத்திரையைப் பார்த்து எடுக்கப்பட்டதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கம்

தொடக்கம்

ஆனால் இந்த மாற்றத்திற்கெல்லாம் தொடக்கம் என்பது 1949-1950தான். பாதுகாப்பு படைகளின் பெயர்கள், கொடிகள் மற்றும் பதவிகளின் மாற்றம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் பரிந்துரைகளும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டனின் ஆலோசனைகள் குறித்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங்குக்கு எழுதிய கடிதமும் தேசிய ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக உள்ளன. 1949 மே 24 அன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து அப்போதைய கவர்னர் ஜெனரல் சி ராஜகோபாலாச்சாரியின் அலுவலகத்திற்கு குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இதில், 'இந்திய ஆயுதப் படைகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதம் கவர்னர் ஜெனரலின் முன் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் மவுண்ட்பேட்டனால் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதாவது இந்த கடிதம் மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒப்புதலின் பேரில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படைகளின் பெயர்கள், கொடிகள் மற்றும் பதவிகளின் மாற்றம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா குடியரசாக மாறிய நிலையில் இந்தியாவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிலிருந்து 'ராயல்' என்ற வார்த்தை கைவிடப்படும் என இந்த கடிதம் தொடங்குகிறது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள்

அதாவது மவுண்ட்பேட்டன் பிரபு, 'ராயல்' எனும் வார்த்தைக்கு பதிலாக 'குடியரசு','ஸ்டேட்' போன்ற வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளார். முன்னதாக ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் உள்ள கொடிகளில் பிரிட்டிஷ்காரர்களின் கிரீடம் சின்னம் பொதுவாக காணப்படும். தற்போது இந்தியா குடியரசாக மாறிய நிலையில் இந்த கிரீடங்களுக்கு பதிலாக அசோக சின்னத்தின் மூன்று சக்கரங்கள் கொண்ட படம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பிரபு பரிந்துரைத்திருந்தார்.

 மூவர்ணக்கொடி

மூவர்ணக்கொடி

கடற்படை கொடிகளை பொறுத்த அளவில் அனைத்து காலணி நாடுகளும் ஏறத்தாழ ஒரே கொடியை பறக்கவிட்டிருந்தன. அதாவது சிலுவை போன்று சிவப்பு நிறத்தில் வெள்ளை கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலையில் யூனியன் ஜாக் கொடி பறக்கவிட்டிருக்கும். இதில் மாற்றத்திற்கு பரிந்துரைத்த மவுண்ட்பேட்டன் பிரபு, இதே அம்சத்தில் யூனியன் ஜாக் கொடிக்கு பதிலாக மூவர்ண கொடியை பொறிக்க பரிந்துரைத்திருந்தார். இதேபோல், இந்திய விமானப்படையை பொறுத்தவரை, யூனியன் ஜாக் மற்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற ரவுண்டல் கொண்ட வெளிர் நீலக் கொடிக்குப் பதிலாக பச்சை, வெள்ளை மற்றும் காவி நிற ரவுண்டல் கொண்ட தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

சீருடைகளில் மாற்றம்

சீருடைகளில் மாற்றம்

அதேபோல சீருடைகளை பொறுத்த அளவில் தற்போது உள்ளதை முடிந்தவரை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். மேலும், மேஜர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளின் பேட்ஜ்களில் அணியும் கிரீடத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அசோகா சின்னத்தை பொறிக்க வேண்டும் என்றும், ஜெனரல்களின் பட்டயங்களில் குறுக்கு வாள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இந்த மாற்றங்கள் காமன்வெல்த் நாடுகள் மற்றும் உலக நாடுகளில் பின்பற்றப்படும் பொதுவான வழக்க முறையை ஒத்திருக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்திருந்தார்.

ஏற்கப்பட்ட பரிந்துரைகள்

ஏற்கப்பட்ட பரிந்துரைகள்

இவ்வாறெல்லாம் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் இந்தியாவின் விருப்பம்தான். எனவே இது குறித்து 1949 செப்டம்பரில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சருக்கு நேரு கடிதம் எழுதி, முன்னாள் கவர்னர் ஜெனரலின் பரிந்துரைகளை முடிந்தவரை சிறிய அளவில் மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் இறுதியில் மவுண்ட்பேட்டனின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+