ட்விஸ்ட்! நடிகை பலாத்கார வழக்கு.. மஞ்சு வாரியர்தான் காரணம்.. நடிகர் திலீப் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பாலியல் வழக்கில் நடிகை மஞ்சு வாரியர்தான் என்னை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார் என நடிகர் திலீப் புதிதாக ஒரு புகாரை தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும் இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் ஆதாரங்களை அழித்தது தொடர்பாக திலீப் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனி நீதிமன்றம்

தனி நீதிமன்றம்

இது தொடர்பாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மலையாள நடிகர் திலீப் மீது காவல் துறை இன்னொரு வழக்கை பதிவு செய்தது. அதாவது அந்த வழக்கில் தினமும் ஒரு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

 மலையாள சினிமா

மலையாள சினிமா

அதில் "இந்த வழக்கு மலையாள சினிமாவின் சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும் தொழில் போட்டி காரணமாகவும் இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டிருக்கிறது. இந்த பொய் வழக்கில் எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும் கேரள காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நடிகை

பாதிக்கப்பட்ட நடிகை

இந்த வழக்கை பாதிக்கப்பட்ட நடிகையும் போலீஸும் அரசுத் தரப்பும் தேவையில்லாமல் நீட்டித்துக் கொண்டே செல்கிறார்கள். தனி நீதிமன்ற நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைத்து வேறு ஒரு நீதிமன்றத்திற்கு செல்லும் வரை விசாரணையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்கள். எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

எனக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள். ஆனால் இவற்றில் எதுவுமே உண்மை இல்லை என புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களும் ட்விஸ்ட்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+