பிரபல நடிகையை கடத்தி.. பாலியல் தாக்குதல் நடத்தி.. வீடியோ எடுத்த திலீப்.. நடந்தது என்ன?- முழு பின்னணி
திருவனந்தபுரம்: கடந்த 2017 பிப்ரவரி மாதம் அந்த மலையாள நடிகை கொச்சியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அந்த நடிகை. ஷூட்டிங் முடித்துவிட்டு கொச்சி திரும்பிய போதுதான் அந்த பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.
கொச்சிக்கு அவர் சென்று கொண்டு இருக்கும் வழியில் அவரின் காரை மறித்து கும்பல் ஒன்று இன்னொரு வேனுக்கு அவரை தூக்கி சென்று பாலியல் தாக்குதல் நடத்தி உள்ளனர். 5 வருடமாக இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவின் டாப் நடிகர் என்று அறியப்படும் திலீப்தான் இந்த குற்றத்தை செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இவரை நடிகர் விஜயகாந்த் படமான ராஜ்ஜியத்தில் பார்த்தவர்கள்.. இவரை வெறும் காமெடியன் என்று நினைக்க வேண்டாம். அவர் கேரளாவில் மிகப்பெரிய நடிகர்.

திலீப்
மிகப்பெரிய நடிகர் என்றால் அரசியல் ரீதியாக இரண்டு பெரிய கட்சிகளிலும் இவருக்கு ஆட்கள் உள்ளனர். கேரளா சினிமா சங்கங்கள் அனைத்திலும் இவருக்கு ஆட்கள் உள்ளனர். மோகன்லால், மம்முட்டி ஆகியோர் டாப் ஸ்டார்களாக இருந்தாலும் கேரளாவில் திரை உலகை கட்டுப்படுத்துவது என்னவோ திலீப்தான். இவர் மீதுதான் அந்த நடிகை பாலியல் புகார் அளித்தார்.. இன்னும் அந்த நடிகைக்கு இந்த வழக்கில் உண்மையான நீதி கிடைக்காமல் இருப்பதற்கு திலீப்பின் அரசியல் பின்புலம்தான் முக்கிய காரணம்.

5 வருடம்
5 வருட விசாரணைக்கு பின் இப்போது கேரளாவில் ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் பிரிவு ஆய்வாளர் கே பி பிலிப் இதில் விசாரணை அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே பல பிரபல மலையாள திரையுலகினர் பெயர் அடிபட்டுவிட்டது. 2 அரசு தரப்பு வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் ராஜினாமா செய்துவிட்டனர். திலீப்பிற்கு எதிராக பேசிய 38 சாட்சியங்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளனர். பலர் இதில் பிறழ் சாட்சியம் ஆகிவிட்டனர். அந்த அளவிற்கு கேரளாவை இந்த வழக்கு உலுக்கி உள்ளது.. அப்படி என்னதான் இந்த வழக்கில் நடந்துள்ளது என்று பார்க்கலாம்!

என்ன நடந்தது?
அந்த பிரபல நடிகை.. தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டு காரில் வரும்போது கொச்சி அருகே அவரை வேன் ஒன்று மடக்கி வழி மறித்துள்ளது. அங்கேயே தாக்கப்பட்ட அந்த நடிகை, வேனுக்குள் எடுத்துச்செல்லப்பட்டு "கும்பல் பாலியல்" தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறார். இதை அந்த கும்பல் வீடியோ எடுத்துள்ளது. நீ போலீசுக்கு போனால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி உள்ளது. ஆனால் அந்த நடிகை மறுநாளே போலீசில் புகார் அளித்தார்.

அடையாளம்
அந்த கும்பலை எனக்கு தெரியவில்லை.. ஆனால் அதில் ஒருவரை மட்டும் நான் மறக்க மாட்டேன்.. அவனை எனக்கு தெரியும்.. அவன் பெயர் பல்சர் சுனி என்று அந்த நடிகை வாக்குமூலம் அளித்தார். இதுதான் இந்த விசாரணையில் கிடைத்த முதல் துப்பு. பல்சர் சுனி ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி இருந்தவர். பிரபல மலையாள நடிகர்களுக்கு இவர் கார் ஓட்டுனராகவும், அடியாளாகவும் இருந்தவர். இவரை பிடித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

நடிகை திலீப் வழக்கு
இந்த விசாரணை மொத்தம் 6 மாதம் நடந்தது. அதன்பின்தான் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டது... அரசல் புரசலாக அடிபட்ட அந்த பெயரை சுனி விசாரணையில் கக்கினார். அந்த பெயர் திலீப்! பல்சர் சுனி வாக்குமூலத்தில் முதல் முறையாக திலீப் பெயரை குறிப்பிட்டார். அவர் சொல்லித்தான் இப்படி செய்தேன்.. அந்த நடிகையுடன் திலீப் சண்டை போட்டார். தன்னை அந்த நடிகை அவமானப்படுத்திவிட்டதாக திலீப் கருதினார். இதனால் அவரை பழி வாங்க வேண்டும் என்று ஆட்களை அனுப்பி இப்படி செய்தார் என்று திலீப் குறித்து பல்சர் சுனி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதோடு இதை வீடியோ எடுத்துவிட்டு வா.. நான் பார்க்க வேண்டும் என்று தன்னிடம் திலீப் கூறியதாகவும் பல்சர் சுனி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தாக்குதல்
இதற்கு முன்பே 2017 ஜனவரியில் அந்த நடிகையை கோவாவில் வைத்து தாக்க முயன்று முடியாமல் பின்னர் கொச்சியில் வைத்து தாக்கியதாக பல்சர் சுனி கூறினார். அதன்பின் 2017 பிற்பகுதியில் திலீப் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்தவர் பின்னர் பெயிலில் வெளியே வந்தார். வெளியே வந்த திலீப் தனக்கு எதிரான சாட்சியங்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் வெளியான போலீசார் விசாரணை தகவல்களின்படி திலீப் பல சாட்சியங்களை மிரட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சாட்சியங்கள் மிரட்டல்
அதன்படி இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான சாகர் வின்சென்ட் என்பவரை அடியாட்களை வைத்து திலீப் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் மேலும் 37 சாட்சியங்களை இவர் மிரட்டி இருக்கிறார். விஐபி ஒருவருடன் சேர்ந்து திலீப் அந்த பாலியல் வீடியோவை தனது வீட்டில் வைத்து பார்த்து இருக்கிறார். பாலச்சந்திர குமார் என்ற பிரபல தயாரிப்பாளரும் இந்த வழக்கில் சிக்கி உள்ளார். திலீப் இந்த வழக்கில் தொடர்ந்து பலரை மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சிலர் ஏற்கனவே பிறழ் சாட்சியங்களாக மாறிவிட்டனர்.

நடிகை
இந்த நிலையில்தான் தற்போது அந்த நடிகையே வெளிப்படையாக தான் பாலியல் தாக்குதலுக்கு ஆளானது பற்றி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் குறிப்பிட்டு தனக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 5 வருடமாக நடந்தாலும் கூட இதுவரை திலீப் மீதான சாட்சியங்களை முழுமையாக நிரூபிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். காரணம் திலீப்பிற்கு இருக்கும் அரசியல் பின்புலம். இரண்டு கோர்ட்டுகள் மாறி, 2 வழக்கறிஞர்கள் மாறி இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அதிலும் வழக்கை விசாரித்த கீழமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுவதாக கூறியதால் வழக்கு கேரள உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது .

கடைசியாக என்ன நடந்தது
இத்தனை வருடமாக வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் கடந்த டிசம்பர் 30, 2021ல் இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு போலீஸ் அதிகாரி பிவி அணில் குமார் திடீரென விசாரணையில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. திலீப் கொடுத்த நெருக்கடியால் இவர் ராஜினாமா செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் அந்த நடிகையே நேரடியாக மனம் திறந்தள்ளதால் தற்போது 5 வருட விசாரணைக்கு பின் இப்போது கேரளாவில் ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் பிரிவு ஆய்வாளர் கே பி பிலிப் இதில் விசாரணை அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications