என்னுடைய திரை வாழ்வை அழிக்க முயற்சி நடைபெற்றது.. விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் கொடுத்த ரியாக்ஷன்
திருவனந்தபுரம்: எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என நடிகர் திலீப் பேட்டியளித்துள்ளார். என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது. எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என அவர் கூறினார். நடிகை கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பு நடிகர் திலீப் இவ்வாறு கூறியுள்ளார்.
கேரள நடிகைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து நடிகை வீடு திரும்பும் போது திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் போது கடத்தப்பட்டார். அப்போது நடிகையை கடத்தியதோடு, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பாலியல் வன்கொடுமையை அரங்கேற்ற பல்சர் சுனிக்கு நடிகர் திலீப் ரூ.1.5 கோடி கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சுமார் இரண்டரை மாதங்கள் நடிகர் திலீப் சிறையில் இருந்த நிலையில் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் மொத்தம் பல்சர் சுனி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில், போதிய ஆதாரங்கள் இல்லை என நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 6 பேர் குற்றவாளிகள் என கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நடிகர், நடிகைகள் என உள்பட மொத்தம் 28 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கில் 261 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 1700 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன.
வழக்கில் மொத்தம் 9 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்த நிலையில் இதில் திலீப் பெயர் 8 வதாக இருந்தது. வரும் 12 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், தீர்ப்புக்கு பிறகு திலீப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது. எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications