Actor Dileep: பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை.. உடனடியாக நடிகை எடுத்த அடுத்தகட்ட நகர்வு
திருவனந்தபுரம்: கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி ஏ1 முதல் ஏ6 வரை குற்றவாளிகள் எனவும், போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப்பை விடுவித்தும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் திலீப் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தையே அதிரவைத்த சம்பவம் நடைபெற்றது. 2017 பிப்ரவரி 17 ஆம் தேதி கொச்சியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. எர்ணாகுளத்தில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த நடிகையை, ஒரு கும்பலினர் கடத்திச் சென்று ஓடும் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட நடிகை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டுள்ளார். இதுகுறித்து, அந்த நடிகை காவல் துறையில் புகார் அளித்த நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் பல்சர் சுனில் தாமாக முன்வந்து சரணடைந்தார். இந்த வழக்கில் நடிகையின் கார் ஓட்டுநர், அவரது உதவியாளர் பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்புள்ளது தெரியவந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டார். அவர் 8 ஆவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.
திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் ஏற்கனவே பகை இருந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்டு திலீப் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினீல் வெளியே வந்தார். இந்த வழக்கை எர்குளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏ1 முதல் ஏ 6 வரை சுனில், மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திலீப் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications