அநீதி யாருக்கு நடந்தாலும் அதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.. நடிகை பாவனா பரபரப்பு போஸ்ட்
திருவனந்தபுரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் சேகுவாராவின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை பாவனா தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: எல்லாவற்றையும் விட, இந்த உலகில் எங்கு யாருக்கு அநீதி நடந்தாலும் சரி, அதன் உண்மைத் தன்மையை ஆழமாக புரிந்து கொள்ளும் திறமை வேண்டும் என சேகுவாராவின் வாசகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை கிளப்பி வரும் நிலையில் நடிகை பாவனா தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார். மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது.
இந்த கமிட்டி, புகார் கொடுத்த நடிகைகளிடம் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "மலையாள திரையுலகமே 15 பேர் கொண்டவர்களின் பிடியில் இருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டினர்.
நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட ஒரு பகுதி அறிக்கையே வெளியாகியுள்ளது. சூட்டிங் செல்லும் போது நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களை உடன் அழைத்து வருகிறார்கள் என்றும் நடிகைகள் சொன்னதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய பிரச்சினைகளாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் நுழையவும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறவும் நடிகைகள் பாலியல் ரீதியில் ஒத்துழைப்பு (அட்ஜெஸ்ட்மென்ட்) தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாலியல் இச்சைக்கு இணங்க மறுக்கும் நடிகைகளை குறி வைத்து சித்தரவதை செய்யப்படுகிறது. அவர்களை வேறு மாதிரி சித்தரித்து வாய்ப்புகளே கிடைக்காதபடி செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.
தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நடிகைகள் குரல் கொடுத்தால் அத்துடன் சினிமா துறையில் பணிபுரியவே முடியாத வகையில் தடை விதிக்கப்படுகிறது. மது அருந்துதல், போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட ஒழுக்கமின்மை சினிமாவில் அதிகம் இருக்கிறது. ஒப்புக் கொண்ட ஊதியத்தை வழங்க மறுப்து, பெண்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு வந்து பாலியல் தொல்லை தருவது உள்ளிட்டவை நடப்பதாக புகாரில் நடிகைகள் கூறியிருந்தனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications