பிரபல நடிகையால் சரிந்த தொழிலதிபர்.. ஹனிரோஸ் அழகை காட்டுவதில் தவறென்ன? ஹனி ரோஸுக்காக ஓடிவந்த ஐபிஎஸ்
திருவனந்தபுரம்: அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் உள்ளது.. ஹனிரோஸ் செய்ததில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை "என்று கேரள ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா கூறியிருக்கிறார். அத்துடன் நடிகை ஹனிரோஸுக்கு தன்னுடைய பலத்த ஆதரவையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் அழகு மற்றும் கவர்ச்சியால் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். இதையடுத்து, பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஹனிரோஸ் அணியும் ஆடைகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

பாபி செம்மனூர்: இந்நிலையில், பிரபல தொழிலபதிர் பாபி செம்மனூரின் நகைக்கடையை திறந்து வைக்க ஹனிரோஸ் அணுகப்பட்ட நிலையில், அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து, சில அடையாளம் தெரியாத நெட்டிசன்கள் ஹனிரோஸின் சோஷியல் மீடியா போஸ்டுக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய கடையை திறக்க வரமாட்டாயா? என்கிற ஆத்திரத்தில் ஹனிரோஸை பாபி தரப்பினர் மோசமாக திட்டி கமெண்ட் செய்தார்களாம். கடைசியில் இதுகுறித்து போலீசுக்கும், முதல்வருக்கும் ஹனிரோஸ் புகார் தந்ததையடுத்து, கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகின. கோடீஸ்வரரான பாபி செம்மனூரும் கைதாகி உள்ளார்.
முன்ஜாமீன்: அதேபோல, சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீதும் எர்ணாகுளம் போலீசில் ஹனி ரோஸ் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம் ராகுல் ஈஸ்வர்.
ஆனால், ராகுல் ஈஸ்வரின் அவதூறான வார்த்தைகளும் சோசியல் மீடியாவில் அவரது மிரட்டல்களும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு எண்ணத்தை தூண்டின என்று தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார் ஹனிரோஸ்.. எனவே ராகுலுக்கு முன்ஜாமீன் கிடைப்பது சிக்கல் தான் என்கிறார்கள்.
ஐபிஎஸ் ஸ்ரீலேகா: இந்நிலையில், நடிகை ஹனிரோஸுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா.. பாபி செம்மனூர் - ஹனி ரோஸ் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டையும், விரிவாக விளக்கி உள்ளார்..
யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீலேகா தந்துள்ள பேட்டியில், "நடிகை ஹனி ரோஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்.. மிகவும் நல்லவர்.. திறமையான கதாநாயகி. இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்றாலும், நான் சில படங்களில் அவரை பார்த்திருக்கிறேன். சிறப்பாகவே நடித்துள்ளார். பார்ப்பதற்கு அழகு, நல்ல உடல் அமைப்பு கொண்டிருக்கிறார்.. அதனாலேயே பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் நகைக்கடைதிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஹனி ரோஸ் அழைக்கப்படுகிறார்.
பிரபலங்கள்: இப்படி பிரபலங்கள், அரசியல்வாதிகளை அழைத்து திறப்பு விழா நடத்தினால், அது ஊடகங்களில் வெளியாகி, கடைக்கு மிகப்பெரிய விளம்பரமாகும்.. இதனால் கடைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து தங்கம் வாங்குவார்கள்.
இப்படி அழைக்கப்படும் பிரபலங்களுக்கு குறிப்பிட்ட தொகை தரப்பட்டாலும், அதைவிட பல மடங்கு நன்மை, சம்பந்தப்பட்ட நகைக்கடைக்குதான் கிடைக்கும்.. அதுக்காகவே இந்த மாதிரி சினிமா பிரபலங்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதுபோன்று அழைக்கப்பட்டே ஹனி ரோஸ், திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்..
சுதந்திரம்: தன்னுடைய விருப்பப்படி, சுதந்திரமாக உடையும் அணிந்து கொள்கிறார்.. அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் உள்ளது.. தங்கள் அழகை காட்டுவதில் என்ன தவறு? ஹனிரோஸ் செய்ததில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவரை சிலர் நடத்தும் விதம் மிகவும் மோசமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஸ்ரீலேகா ஐபிஎஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications