ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை உலகமே பாராட்டும் போது! நடிகை பார்வதி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க
திருவனந்தபுரம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அரசியல் சாசனத்தை மேற்கோள்காட்டி நடிகை பார்வதி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
ராமர் பிறந்ததாக கூறப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு மூன்று தளங்களில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதனால் அயோத்தியே விழாக் கோலம் பூண்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிகழ்வுக்கு அனுமதி சீட்டு இருந்தவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த விழாவுக்கு மடாதிபதிகள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் பால ராமரின் கண் திறப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான சடங்குகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார்.
இந்த விழாவை உலகெங்கும் வாழும் மக்கள் போற்றி வரும் நிலையில் பிரதமர் மோடி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதியின் இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவர் அரசியலமைப்பு சட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் பார்வதி கூறியிருப்பதாவது: 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போது இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் ஷேர் செய்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளிவல்லை. இந்த நிலையில் பார்வதியின் பதிவு பேசும் பொருளாகியுள்ளது. பாலிவுட் நடிகர்கள், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரானா, மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரனாவத், விவேக் ஓபராய், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பாடகர் சங்கர்மகாதேவன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications