மலையாள நடிகையின் ஆபாச படம்.. மார்பிங் செய்து பதிவிட்ட 2 குமரி இளைஞர்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்
மலையாள நடிகையின் ஆபாச படத்தை பதிவிட்ட 2 பேர் கைதானார்கள்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் மார்பிங் செய்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர் 2 பேர்.. அவர்கள் குமரியை சேர்ந்தவர்கள்..!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பிரவீணா.. இப்போது தமிழ் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது ஆபாச போட்டோக்கள் சில, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியானது...
இதை பார்த்து நடிகை பிரவீணாவும், அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்... அந்த ஆபாச போட்டோக்களில் இருப்பது தொடர்புடைய நடிகையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிர்ச்சி
எனினும் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானதால், உடனடியாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் புகார் அளித்தார் பிரவீணா. இந்த புகார் தொடர்பாக, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் ஒரு தனிப்படைக்கு உத்தரவிட்டார்... இவர்கள் நடத்திய விசாரணையில், பிரவீணாவின் போட்டோ ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.. இதை பதிவிடுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது..

2 பேர் கைது
இதையடுத்து, அந்த ஐடி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர்.. அப்போதுதான் மணிகண்டன், பாக்கியராஜ் என்ற 2 பேரும் சிக்கினர்.. 2 பேருமே குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.. இதில் மணிகண்டன் சங்கரை நாகர்கோயிலில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், பாக்கியராஜ் அதற்குள் தலைமறைவானார்.. பாக்யராஜுக்கு 22 வயதாகிறது.. அவருக்கான தேடுதல் வேட்டை தீவிரமானதில், டெல்லி சாகர்பூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது..

டெல்லி
இதையடுத்து டெல்லி சென்ற கேரள தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். 2 பேரையும் நேற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்... அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, இவர்களின் கைது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை பிரவீணா சொல்லும்போது, "என்னுடைய படங்களை மார்பிங் முறையில் ஆபாச படங்களாக மாற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர்களை கைது செய்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்...

கோரிக்கை
சினிமா துறையிலுள்ள பல்வேறு நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.. ஆனால், பெரும்பாலானோர் போலீசில் புகார் செய்யாததால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஊக்கமாக அமைந்துவிடுகிறது... அதனால், இனியாவது பாதிக்கப்பட்ட நடிகைகள் இதுதொடர்பாக புகார் அளிக்க முன்வரவேண்டும்.." என்று கேட்டுக் கொண்டார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications