Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் பார்ட்டியில் போதை பொருள்.. டான் உடன் சிக்கிய ’பிசாசு’ நடிகை? மஞ்சும்மெல் பாய்ஸ் நடிகருமா? ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் போதைப்பொருள் விவகாரம் வெடித்திருக்கிறது. கொச்சியில் போதை பொருளுடன் பிரபல ரவுடி ஹோட்டலில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருட்களை பெற்றதாக பிசாசு படத்தில் நடித்த நடிகை பிரயாகா மார்ட்டின், மஞ்சும்மெல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் ஆண்களின் ஆதிக்கம் மற்றும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து விசாரிப்பதற்காக ஹேமா கமிட்டியை அமைத்து அரசு உத்தரவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது.

sreenath bhasi drugs

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும்,இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசியல் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் பல பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது மலையாள திரையுலகில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொச்சியில் பிரபல ரவுடி நடத்திய போதை விருந்தில் பிரபல நடிகர் நடிகைகள் பங்கேற்றதாகவும் இந்த விவகாரத்தில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாசி, தமிழில் பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஆகியோர் போலீசாரின் விசாரணையில் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இரவு போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த ஹோட்டலை சுற்றி வளைத்த போலீசார் பிரபல டானான ஓம் பிரகாஷ் மற்றும் அவனது கூட்டாளியான சிகாஷ் என்பவனை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை பொருட்கள், மது பாட்டில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஓம்பிரகாஷ் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் வெளிநாட்டில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து பார்ட்டி வைத்து சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பார்ட்டி மூலம் புதிய வாடிக்கையாளர்களை கவர ஓம் பிரகாஷ் திட்டமிட்ட நிலையில் அந்தப் பார்ட்டியில் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரளா போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு ரிமாண்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாசி, தமிழில் பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் போதைப் பொருள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், ஹோட்டல் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன் மீதான புகார் குறித்து பிரயாகா மார்ட்டின் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஓம் பிரகாஷை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.. நண்பர்கள் சிலரை பார்க்க ஹோட்டலுக்கு சென்றதாகவும், தொடர்ந்து கோழிக்கோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் அந்த அறையில் இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்ததாகவும், இந்த விவகாரத்தில் தன்னை இணைத்து பேசுவது துரதிஷ்டவசமானது' என கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+