பாஜகவில் சேரும் சசிதரூர்? ராகுல் காந்தியின் செயலால் கடும் அதிருப்தி.. மேலிட மீட்டிங்கில் ‛எஸ்கேப்’
திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை போல் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வாகை சூடியது. ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பாஜக பின்தங்கியது.

இது காங்கிரஸ் கட்சியினருக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இதனால் எப்படியாவது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியினர் பணிகளை தொடங்கி உள்ளனர். கேரளா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் இன்று மீட்டிங் நடைபெற உள்ளது.
இதனை சசிதரூர் எம்பி புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் அவர் இந்த மீட்டிங்கை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் கொச்சியில் நடந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் சசிதரூர் பங்கேற்றார். ராகுல் காந்தி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அவருக்கு உரிய மரியாதை காங்கிரஸ் தலைவர்கள் வழங்கவில்லை.
புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கு இருக்கை வழங்கப்படவில்லை. அதோடு பேசும் நேரம் தொடர்பான விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. அதாவது ராகுல் காந்தி வந்த பிறகு சசிதரூர் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பிற தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சசிதரூர் பின்னுக்கு தள்ளப்பட்டார். இதனால்அவர் அதிருப்தியடைந்தார்.
அதேபோல் ராகுல் காந்தியும் பிற தலைவர்களை சுட்டிக்காட்டி பேசிய நிலையில் சசிதரூரை புறக்கணித்தார். மேலும் அவர் தனது உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் டெல்லி மேலிட தலைவர்களிடம் மதிப்பு இல்லை. என்னை ஓரம்கட்டுகின்றனர் என்று அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தான் கேரளா சட்டசபை தேர்தல் தொடர்பான மேலிட தலைவர்களின் கூட்டத்தை அவர் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிதரூரின் அதிருப்தி பற்றி இன்னும் காங்கிரஸ் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சசிதரூர் சமீபகாலமாக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காண்பித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை அடிக்கடி புகழ்ந்து பேசி வருகிறார். பாஜகவின் பிற தலைவர்களையும், அவர்களின் திட்டத்தையும் புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் சசிதரூர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications