நாம இருக்குற ரேஞ்சுக்கு.. இதெல்லாம் இப்போ தேவையா? தமிழ்நாடு மட்டுமல்ல.. கேரளாவில் காங்கிரஸ் ஆட்டம்!
திருவனந்தபுரம்: தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தொடங்குவதற்கு முன்பே, அண்டை மாநிலமான கேரளாவில் அரசியல் களம் இப்போதே 'தகி... தகி...' என்று தகித்துக்கொண்டு இருக்கிறது. தேசிய அளவில் 3 தேர்தல்களாக ஆட்சியை பிடிக்க முடியாமல் திணறும் காங்கிரஸ்.. தமிழ்நாட்டில் மாநில அரசில் பங்கு கேட்டு வருகிறது.
இப்போது கேரளாவிலும் காங்கிரஸ் உள்ளே முதல்வர் சீட்டிற்கு சண்டை வந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் எல்.டி.எஃப் (LDF) அணியை விட, எதிர்க்கட்சியான காங்கிரஸில்தான் 'யார் அடுத்த முதல்வர்?' என்கிற குடுமிப்பிடி சண்டை ஊர் சிரிக்கத் தொடங்கியிருக்கிறது.

"முகமே கிடையாது!" - ஹைகமாண்ட் அதிரடி
பொதுவாக, தேர்தல் வருவதற்கு முன்பே "இவர் தான் எங்கள் கேப்டன்" என்று அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால், கேரள காங்கிரஸின் கோஷ்டிப் பூசலை நன்கு அறிந்த டெல்லி மேலிடம், கடந்த ஜனவரி மாதம் ஒரு மெகா ஸ்கெட்ச் போட்டது. "தேர்தலுக்கு முன்னாடி முதல்வர் முகம் கிடையாது... வெற்றிக்கு பிறகுதான் முடிவு!" என்று கே.சி.வேணுகோபால் மூலமாக அதிரடி உத்தரவு பறந்தது.
ஆனாலும், உள்ளுக்குள் நடக்கும் 'ஈகோ' யுத்தம் அடங்கியபாடில்லை.
மல்லுக்கட்டும் மூன்று 'தல'கள்!
கேரளா அரசியல் சதுரங்கத்தில் இப்போது மூன்று பேர் தங்களின் காய்களை மிகத் தீவிரமாக நகர்த்தி வருகிறார்கள்:
சதீசன் (எதிர்க்கட்சித் தலைவர்): சட்டசபையில் ஆளுங்கட்சியை ஓட ஓட விரட்டியவர் என்பதால், 'நேச்சுரல் சாய்ஸ்' நான்தான் என மார்தட்டுகிறார். ஆனால், மற்ற சீனியர்கள் இவரை நிம்மதியாகச் செயல்பட விடுவதாகத் தெரியவில்லை.
சசி தரூர் ( ஸ்டார் லீடர் ): தரூர் எப்போதுமே ஒரு 'எக்ஸ்-ஃபேக்டர்' தான். கடந்த மாதம் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை தரூர் 'மிஸ்' செய்ததுதான் இப்போது ஹாட் டாபிக். "என்னை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள்" என அவர் தரப்பு கொதிக்க, "அவர் பிசியாக இருந்தார்" என தலைமை பூசி மெழுகுகிறது.
ரமேஷ் சென்னிதலா (அரசியல் சாணக்கியர்): "காங்கிரஸ் பாரம்பரியத்தில் முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க மாட்டோம்" என அமைதியாகப் பேசினாலும், பிரச்சாரக் குழுத் தலைவராகத் தன் செல்வாக்கை நிரூபிக்கப் பார்க்கிறார் சென்னிதலா.
கிண்டலடிக்கும் சிபிஎம் தோழர்கள்
"கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் இந்த கோஷ்டிப் பூசலைப் பார்த்து ஆளும் சி.பி.எம் (CPI-M) முகாமில் இப்போதே லட்டு கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். 'மூழ்க போற கப்பலுக்கு இத்தனை கேப்டன்களா?' 'டைட்டானிக் மூழ்கும் முன் அங்கே பலர் வயலின் வாசிப்பார்கள்.. அப்படிதான் மூழ்க போகும் கப்பலில் இவர்கள் வயலின் வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் முதலில் ஜெயிக்கட்டும்.. எனக் கிண்டலடிக்கிறார்கள் தோழர்கள்.
அதிலும் தேசிய அளவில் 3 தேர்தல்களாக ஆட்சியை பிடிக்க முடியாமல் திணறும் காங்கிரஸ்.. தமிழ்நாட்டில் மாநில அரசில் பங்கு கேட்டு வருகிறது. இவர்கள் இருக்கிற ரேஞ்சுக்கு இந்த உட்கட்சி மோதல் எல்லாம் தேவையா என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன . தேர்தலுக்குப் பிறகு முதல்வர் நாற்காலி யாருக்கு என்பது ஒருபுறம் இருக்கட்டும்... அதற்கு முன்னால் இந்த 'உட்கட்சி போரை' காங்கிரஸ் தலைமை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!"
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications