நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு "குட்டி"களின் கதை..!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இது ஒரு குட்டிக் கதை.. தப்புத் தப்பு.. யானைக் குட்டிக் கதை பார்க்கலாமா, வாங்க.

Recommended Video

    குழந்தை-யானை நட்பு..வைரலாகும் டிக்டாக் வீடியோ

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்.. இவர் ஒரு யானைப் பாகன். இவரது மகள்தான் பாமா.. குட்டிப் பாப்பாவுக்கு ஜஸ்ட் 2 வயதுதான். இந்த லட்டு குட்டிதான் இப்போ கேரளாவில் ரொம்பப் பிரபலம்.. அப்படி என்ன செஞ்சுருச்சு இந்த குட்டிம்மா என்றுதானே கேட்கறீங்க.. இருக்கு இருக்கு.

    பாமாவின் கதையைப் பார்ப்பதற்கு முன்பு உமாதேவியின் கதையை நாம் கேட்டாக வேண்டும்.. அது யாரு உமா தேவி.. சொல்றோம்.. கடந்த 8 வருடமாக மகேஷ் வீட்டில் வளர்ந்து வரும் யானைதான் உமாதேவி. கும்கி படத்தில் வரும் ஜைஜான்டிக் யானை போல பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த உமாதேவி முழுக்க முழுக்க பாசக்காரி.

    பாசக்கார உமாதேவி

    பாசக்கார உமாதேவி

    இவள் மீது பாசம் வைத்து விட்டால் போதும்.. கூடவே ஒட்டிக் கொண்டு இருப்பாள். .அப்படி ஒரு நல்ல மனசு கொண்ட யானை. இந்த உமாதேவிக்கு கிடைத்த சூப்பர் தோழிதான் நம்ம பாமாக் குட்டி. பாமாவுக்கு இப்போது 2 வயது. ஆனால் பிறந்தது முதலே உமாதேவியுடன்தான் பெரும்பாலான நேரத்தைக் கழிக்குது இந்த பாமாக் குட்டி.

    தன் மகள் போலவே

    தன் மகள் போலவே

    தனது குழந்தை போலவே பாமாவை உமா தேவி பார்த்துக் கொள்கிறது. எப்போதும் பாமாவுடன் இருப்பதையே அது விரும்புகிறது. பாமா என்ன செய்தாலும் பவ்யமாக பின்னாடியே நின்று உறுதுணையாக இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையில் தெருவில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்க அதில் இறங்கி விளையாடியுள்ளார் குட்டிப் பாப்பா பாமா.. அப்போது பாமாவுக்கு பாதுகாப்பாக பின்னாடியே பாடிகார்டு போல வந்துள்ளது உமாதேவி.

    வைரலான வீடியோ

    வைரலான வீடியோ

    நாக்கைத் துருத்தியபடி குட்டிப் பாப்பா பெருமிதமாக தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்து வர, பின்னாடியே ஒய்யாரமாக உமாதேவி ஆடி அசைந்து வர.. அந்த வீடியோவை அப்பா திருமேனி டிக்டாக்கில் போட சூப்பர் டூப்பர் வைரலாகி விட்டது இந்த வீடியோ. இந்த வீடியோதான் உமா - பாமாவின் பாசக் கதையை உலகமே அறிந்து கொள்ள அடிகோலியது.

    துதிக்கை படாமல் கவனம்

    துதிக்கை படாமல் கவனம்

    என்ன ஆச்சரியம் தெரியுமா.. உமா தேவி எப்போதும் பாமாவுடனேயே இருந்தாலும், அதன் துதிக்கையின் நிழல் கூட பாமா மீது பட்டதில்லையாம். அப்படி கவனமாக குழந்தையைப் பார்த்துக் கொள்கிறது உமாதேவி. பாமா மீது துதிக்கை பட்டு விடாமல் அப்படி கவனமாக உமாதேவி பார்த்துக் கொள்வதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படி ஒரு பாசமா இந்த யானைக்கு என்று எல்லோரும் உமாதேவியைக் கொண்டாடுகின்றனர்.

    ஊரே கூடி ஆச்சரியம்

    ஊரே கூடி ஆச்சரியம்

    பாமாவுக்கும், உமா என்றால் கொள்ளைப் பிரியம்.. மேடம் இப்பவே மகாராணி போல ஃபீல் பண்றாங்களாம் உமாதேவி இருக்கும் தைரியத்தில்!. எங்கு போனாலும் பின்னாடியே உமாவும் வருவதால் இவங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டுக் கொண்டு போகும்போது ஊரே கூடி புன்னகையுடன் வேடிக்கை பார்க்குமாம்.

    "காய்ச்சின பாலு தரேன் கல்கண்டு சீனி தரேன்
    கை நிறைய வெண்ணை தரேன் வெய்யலிலே போக வேண்டாம்".. என்ன சொன்னாலும் பாமாவை விட்டு பிரியவே பிரிய மாட்டாங்க இந்த உமா குட்டி... இந்த 2 குட்டிகளின் கதைதான் இப்போது கேரளாவில் ரொம்பப் பிரசித்திமாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+