பாரத் பந்த்! கேரள எல்லையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்! போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பு
திருவனந்தபுரம்: இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அந்த வகையில், கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

கேரளாவில் வேலை நிறுத்த போராட்டம் காலை முதல் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். எனவே தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லாது, தனியார் பேருந்து ஓட்டுநர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல மேற்கு வங்கத்திலும் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications