“அவ்வளவு வெறி..” நாத்திகர்கள் அழிய பிரார்த்திப்பேன்! பாஜகவை சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி பரபர பேச்சு
மத நம்பிக்கை அற்றவர்கள் மொத்தமாக அழிய வேண்டும் என்று பிரார்த்திப்பேன் என பாஜகவை சேர்ந்தர் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: மத நம்பிக்கை அற்றவர்கள் மொத்தமாக அழிய வேண்டும் என்றும் அதற்காக கோயிலில் நான் பிரார்த்திப்பேன் எனவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்து இருக்கிறார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.
பிரபல மலையாள நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான "ஐ" படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் சுரேஷ் கோபி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டிலேயே அவர் பாரதிய ஜனதா கட்சியிலும் இணைந்தார்.

சுரேஷ் கோபி சர்ச்சைகள்
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு சுரேஷ் கோபி தெரிவித்த பல கருத்துக்கள் மத ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாட்டிறைச்சி தடை குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி அதில் தோல்வி அடைந்தார்.

மகா சிவராத்திரி
கடந்த 2018 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கி கைதான அவர், 1 லட்சம் ரூபாய் பத்திரம் கொடுத்து உடனே வெளியே வந்தார். சுரேஷ் கோபி பாஜகவில் இணைந்தாலும் பல்வேறு திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் அண்மையில் கேரளாவின் ஆலுவாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்றார்.

அனைத்து மதங்களையும் நேசிக்கிறேன்
அதில் ஏராளமான பக்தர்கள் முன்பு சுரேஷ் கோபி பேசிய உரை பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் பேசுகையில், "நான் அனைத்து மதங்களின் கடவுள்களையும், வேதங்களையும் மதிப்பவன். குர்ஆன், பைபிளையும் நான் மதிக்கிறேன். குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் அன்பையும் போதிக்க கோயில்கள் தேவைப்படுகின்றன. அதைதான் நான் பக்தியாக பார்க்கிறேன். கடவுளை நம்புபவர்களை நான் நேசிக்கிறேன்.

கடவுள் மறுப்பாளர்களை நேசிக்க மாட்டேன்
ஆனால், இந்த உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நான் நேசிக்க மாட்டேன். அனைவரும் இவ்வாறு இருக்க வேண்டும். பக்தி என்பது யாரையும் துன்புறுத்துவதற்கானது அல்ல. ஆனால், மத வழிபாடுகள், மத நிறுவனங்களை இழிவுபடுத்தும் யாரும் இவ்வுலகில் எந்த சூழலிலும் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்தது இல்லை.

அரசியலாக்குவார்கள்
நான் யாரை பற்றி பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். ஆனால், இதில் அரசியல் செய்வார்கள் என்பதால் நான் அதை பற்றி சொல்லவில்லை. மத நம்பிக்கை உடையவர்கள் யாருக்கும் எந்த நேரத்திலும் தீங்கு நடக்கக்கூடாது. நாம் உலகின் நன்மைக்காக பிரார்த்திக்கிறோம்.

அழிவுக்காக பிரார்த்திப்பேன்
மத நம்பிக்கை இல்லாதவர்கள் அதை அழிக்க நினைக்காமல் தங்கள் வழியில் செல்ல வேண்டும். இங்கேயே பதுங்கி இருக்க முயற்சி செய்யாதீர்கள் என சத்தம்போட்டு கத்த வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நான் மத நம்பிக்கை அற்றவர்களின் அழிவை வேண்டி கோயிலில் பிரார்த்தனை செய்ய உள்ளேன். அனைவரும் இதை செய்யுங்கள்." என்றார்.

பெரும் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த சுரேஷ் கோபியின் இந்த கருத்துக்கு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகள் அதிகம் வசிக்கும் கேரளாவில் அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள். சுரேஷ் கோபி கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications