கடவுளின் தேசத்தில் கணக்கை திறந்த பாஜக.. சுரேஷ் கோபி பெரும் வெற்றி .. நடந்த இன்னொரு பெரிய விஷயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்முறையாக தனது கணக்கை தொடங்கியுள்ளது பாஜக. சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் கடும் போட்டி அளித்த நிலையில் தோல்வியை தழுவினார். கேரளாவில் கம்யூனிஸ்டுகள் இந்த தேர்தலில் அங்கு கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் பாஜகவின் எழுச்சி மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டியே நடக்கும். ஒன்று கம்யூனிஸ்டுகள் ஜெயிப்பார்கள்.. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஜெயிக்கும். இதுதான் இன்று வரை உள்ள நடைமுறையாகும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சிபிஐ(எம்) 1 இடத்திலும், காங்கிரஸ் 15 இடத்திலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்திலும், கேரள காங்கிரஸ் (எம்) 1 இடத்திலும், ஐயுஎம்எல் 2 இடத்திலும் வெற்றி பெற்றன.

kerala Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP Congress 2024 2024

கேரளாவில் ஆலப்புழா, ஆலத்தூர், அட்டிங்கல், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், மாவேலிக்கரா, பாலக்காடு, பத்தனம்திட்டா, பொன்னானி , திருவனந்தபுரம், திருச்சூர், வடகரா, வயநாடு ஆகிய 20 தொகுதிகள் உள்ளன.

கேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ETG வெளியிட்ட கணிப்பின் படி, கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்திலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 19 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது. மறுபுறம், சிவோட்டர் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான UDFக்கு 17-19 இடங்களும், NDA க்கு 1-3 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் பாஜக 2-3 இடங்களிலும், காங்கிரஸ் 13-14 இடங்களிலும், எல்டிஎஃப் 0-1 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தன.

கணிப்புகளின் படியே இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் 13 இடங்களிலும், ஐயுஎம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 412338 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 337652 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் முரளிதரன் 328124 வாக்குகளும் பெற்றுள்ளார். இதன் மூலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 74686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

kerala Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP Congress 2024 2024

அதேநேரம் கம்யூனிஸ்டுகள் தனது கோட்டையிலேயே கடுமையாக வீழ்ந்துள்ளனர். வெறும் ஒரு தொகுதியில் தான் முன்னிலை வகிக்கிறார்கள். அலத்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 21542 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் 35 சதவீதம் வாக்குகளுடன் 18 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24.52 சதவீதம் வாக்குகள் வாங்கியும் ஒரு இடத்தில் தான் முன்னிலை வகிக்கிறது. பாஜக 16.25 சதவீதம் வாக்குகளுடன் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.. பாஜகவின் வாக்கு சதவீதம் கடுமையாக அதிகரித்திருப்பது கம்யூனிஸ்டுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+