Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவனந்தபுரத்தை கைப்பற்றிய பாஜக.. கேரளாவில் நிகழ்ந்த வரலாற்று சாதனை! வெற்றி வசமானது இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில், பாஜக இதற்கு முன்னர் ஒரு மாநகராட்சியை கூட வென்றது கிடையாது. ஆனால், தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனையை கட்சி நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி இடதுசாரி கூட்டணி வசம்தான் இருந்தது. இதனை தற்போது பாஜக கைப்பற்றியிருப்பதன் மூலம், 45 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றை கட்சி மாற்றி அமைத்திருக்கிறது.

kerala BJP local body election result

வெற்றியை உறுதி செய்த மெஜாரிட்டி

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியின் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி 29 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் ஒரு வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

வளர்ச்சியை முன்னிறுத்திய பாஜக

இந்த வெற்றிக்கு பாஜக தீவிரமாக பணியாற்றியிருக்கிறது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக தனது வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்திருந்தது. தேர்தல் அறிக்கையில், திருவனந்தபுரத்தை எப்படி டெவலப் செய்வது என்பதை ரோட் மேப்-ஆக குறிப்பிட்டிருந்தது. வளர்ச்சி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரே கட்சி நாங்கள்தான் என்பதை மக்கள் மத்தியில் பாஜக வலுவாக கொண்டு சென்றது.

தங்கம் திருட்டு

சபரிமலை கோயிலில் இருந்து தங்கம் திருடப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளில் இடதுசாரித் தலைவர்களுக்கு எதிராக எழுப்பி, இந்துக்களின் மன உணர்வுகளை கட்சி மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை சிபிஎம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரமாக கொண்டு சென்றது. ஆனால், தங்கம் திருட்டு வழக்கிலிருந்து கவனத்தை திசை திருப்பவே சிபிஎம் தந்திரம் செய்வதாக பாஜக விமர்சித்து தேர்தலை எதிர்கொண்டது.

களமிறக்கப்பட்ட தலைகள்

என்டிஏ வேட்பாளர்களுக்காக அடிமட்ட அளவில் பிரச்சாரம் செய்ய பாஜக மூத்த தலைவர்களையும் களம் இறக்கியது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றால், 45 நாட்களுக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து மாநிலத் தலைநகரின் வளர்ச்சித் திட்டத்தை அறிவிப்போம் என்றும் கட்சி உறுதியளித்திருந்தது. பிரதமர் தனது வருகைகளின்போது அவரை வரவேற்க, ஒரு பாஜக மேயர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இது பாஜக முன்வைத்த முக்கிய முழக்கங்களில் ஒன்றாகும். 'மாறாதது மாறும்' என்ற முழக்கத்தையும் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டனர் என பாஜகவினர் கூறுகின்றனர்.

விமர்சனமும் வெற்றியும்

கடந்த 2020 மேயர் வேட்பாளர் தேர்தலில் சிபிஎம் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னதான் நாட்டின் இளம் மேயராக இவர் இருந்தாலும், மாநகராட்சி அமைப்பானது ஊழலில் சிக்கி தவித்து வருகிறது என்று பாஜக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தது.

பயங்கரமாக வொர்க் செய்த பாஜக

திருவனந்தபுரம் மேயர் வெற்றி என்பது, ஒரே தேர்தலில் நடந்துவிடவில்லை. கடந்த 1980 முதல் இந்த பகுதியை பாஜக தொடர்ந்து குறிவைத்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இந்துத்துவ வாக்கு வங்கி ஓரளவுக்கு இருந்து வந்தது. அதை வளர்த்து தற்போது வெற்றியாக அறுவடை செய்திருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 6 கவுன்சிலர்களை மட்டுமே பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டில் 34 ஆகக் குறைந்தபோதிலும், அப்போதும் பாஜகவே முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

பாஜகவின் அடுத்த இலக்கு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவதே பாஜகவின் அடுத்த இலக்கு. நேமம், வட்டியூர்காவு, காழக்கூட்டம் போன்ற நகர்ப்புறத் தொகுதிகளில் பாஜக தனது பலத்தை அதிகரிக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தத் தொகுதிகள் திருவனந்தபுரம் மாநகராட்சிப் பகுதியின்கீழ் வருகின்றன, மேலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் இங்கெல்லாம் பாஜக முன்னிலை வகித்தது என்பது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+