கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்.. போதைப்பொருள் ஜிஹாத் குறித்து கிறிஸ்தவர்கள் கவலை - பாஜக தலைவர் நட்டா
திருவனந்தபுரம்: இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு நடுநிலையாக இருப்பதுபோல் பாசாங்கு காட்டுகிறது.
ஆனால், இந்த அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று சொல்ல நான் விரும்புகிறேன். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அனுசரணை காட்டுகிறது..

பயங்கரவாதிகள் கேரளாவில் உருவாகின்றனர்
இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது. பினராயி விஜயன் அரசு சில பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது கேரளாவில் பொதுவான மனநிலையாக இருந்து வருகிறது. பிரித்தாளும் சூழ்ச்சியே அதன் கொள்கை. பெரும்பான்மையான மக்கள் இந்த மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் தொகை மாற்றத்தை விரும்பவில்லை.

கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கவலை
நமது மதத் தலைவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள், இந்த பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றனர். அவர்களின் சிக்கலை நம்மால் உணர முடிகிறது. அவர்களுக்கு இங்கு நடக்கும் போதைப் பொருள் ஜிஹாத் மீது கவலை இருக்கிறது. கேரளா அரசு சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

அரசியல் கொலை
கேரள மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் அரசியல் படுகொலைகள், ஒருங்கிணைந்த குற்ற சம்பவங்கள் இங்கு கொதிப்பான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் கொலைகளை செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடவும் மாநில அரசே உதவி வருகிறது. ஜனநாயக முறையிலும் கூட்டாட்சியின் அடிப்படையிலும் போராடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நாங்கள் நிறுத்துவோம்." என்றார்.

தேச விரோத சக்திகள்
முன்னதாக கோழிக்கோடு விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அம்மாநில பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், "தேச விரோத சக்திகள் கேரளாவில் இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுசரணை காட்டி வருகின்றன. இந்த தேச விரோத சக்திகளுக்கு எதிராக நிச்சயம் நாம் போராடுவோம். அவர்களின் நடவடிக்கையை மத்திய அரசு உற்று நோக்கி வருகிறது." என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications