56 துண்டுகளான ரோஸ்லின்.. 5 துண்டுகளான பத்மா.. குங்குமம் பூசப்பட்ட பை.. வெலவெலக்கும் கேரளா நரபலி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட முதலாவது உடலானது 56 துண்டுகளாக கூறுபோடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் பத்மா. இவர் சில ஆண்டுகளாக கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அது போல் கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்பவரும் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

2 பேரின் செல்போன்
2 பேரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடைசியாக பத்தினம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருவரும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த முகமது ஷபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

நரபலி
நரபலி கொடுக்கப்பட்ட பெண் பத்மா, எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் (70) என்பவரின் மனைவியாவார். இருவரும் தோட்ட வேலைக்காக கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரங்கன் சொந்த ஊருக்கு திரும்ப பத்மா மட்டும் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்திருந்தார்.

முகமது ஷபி
முகமது ஷபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. முதலில் ரோஸ்லினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் 56 துண்டுகளாக கூறுப்போடப்பட்டிருந்தது. அது போல் இரண்டாவது கிடைத்த பத்மாவின் உடல் 5 துண்டுகளாக கூறு போடப்பட்டிருந்தது.

குங்குமம்
உடல்கள் போடப்பட்ட பைகளில் குங்குமம் தடவி இருந்தது. ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நரபலிகள் கடந்த ஜூன் 8 மற்றும் செப்டம்பர் 26 ஆம் தேதிகளில் மாலை 5 முதல் 6 மணிக்குள் நடந்திருக்கிறது. பத்மாவையும் ரோஸ்லினையும் முகமது ஷபிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தெரியுமாம். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications