இவ்வளவு ஈகோ ஆகாது.. சஞ்சு சாம்சன் எதிர்காலத்தை முடிச்சிட்டீங்களே.. சசிதரூர் எம்பி கடும் ‛அட்டாக்’
திருவனந்தபுரம்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதனால் டென்ஷனான திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடர் மார்ச் மாதம் 9 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது 50 ஓவர் கொண்ட போட்டியாகும். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்துகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. இதையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
பிசிசிஐ சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டனாக ரோகித் ஷர்மா உள்ளார். துணை கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் 2 சதம் விளாசி அசத்தினார். கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மொத்தம் 3 சதங்களை விளாசி உள்ளார். அதோடு அவர் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் போட்டியிலும் சதம் விளாசியிருந்தார்.
இதனால் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் பிசிசிஐ சஞ்சு சாம்சனை புறம்தள்ளி உள்ளது. அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கப்படாததை திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு கேரளா கிரிக்கெட் சங்கத்தை சாடியுள்ளார். இதுதொடர்பாக சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இது கேரளா கிரிக்கெட் சங்கம் மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான வருத்தமான கதை. சையத் முஸ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களுக்கான இடையேயான பயிற்சி கேம்பில் பங்கேற்க மாட்டேன் என்று முன்கூட்டியே சஞ்சு சாம்சன், கேரளா கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் விஜய் ஹசாரேவுக்கான கேரளா அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த பேட்ஸ்மென் ஹசாரேவில் (விஜய் ஹசாரேவில்) 212 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடி சராசரியை 56.66 (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியின் சதத்தையும் சேர்த்து) என்று வைத்துள்ளார். இப்போது அவரது எதிர்காலத்தை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோ சிதைத்துள்ளது. அதோடு இந்த ஈகோ விஜய் ஹசாரேவில் கேரளா அணியை காலிறுதிக்கு கூட தகுதி பெற வைக்கவில்லை. இது கவலையாக இல்லையா? '' என்று சாடியுள்ளார்.
அதாவது விஜய் ஹசாரே போட்டிக்கான பயிற்சியில் சஞ்சு சாம்சன் பங்கேற்காததால் கேரளா கிரிக்கெட் சங்கம் அந்த தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டது. அதோடு பிசிசிஐயிடமும் புகார் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சன் இல்லாத கேரளா அணி விஜய் ஹசாரே தொடரில் லீக்கிலேயே வெளியேறியது. மேலும் கேரளா கிரிக்கெட் சங்கம் - சஞ்சு சாம்சன் இடையே மோதல் போக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தான் அவருக்கு விஜய் ஹசாரே போட்டிக்கான அணியில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தால் சஞ்சு சாம்சன் ரன்கள் குவித்து இருப்பார். தேர்வுக்குழுவின் கவனம் அவர் பக்கம் திரும்பி சாம்பியன்ஸ் டிராபி 2025ம் ஆண்டு தொடருக்கான அணியில் இடம் கிடைத்திருக்கும். இதனால் தான் கேரளா கிரிக்கெட் சங்கத்தை சசிதரூர் எம்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications