"சரிதா".. பினராயி இல்லாத நேரம் பார்த்து.. திடீரென முதல்வர் வீட்டிற்குள்ளேயே புகுந்த சிபிஐ! பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென அங்கு சிபிஐ அதிகாரிகள் படை சோதனை நடத்தியது.
கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மோசடி குற்றச்சாட்டுதான் சோலார் பேனல் மோசடி. சோலார் பேனல்களை வாங்கி விற்பதில் முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் மக்களை பலர் ஏமாற்றி இருக்கிறார்கள். பல கோடிகளை அப்போதைய காங்கிரஸ் அரசு சுருட்டி இருக்கிறது என்று 2013ல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும் அவரின் காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார்கள். இந்த ஊழலில் முன்னாள் கேரளா காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி பெயரும் அடிபட்டது.

காங்கிரஸ் கட்சி
கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி அங்கு மாற்றம் அடைந்து, இடதுசாரிகள் கூட்டணி வெற்றிபெற கூட இது முக்கியமான காரணமாக அமைந்தது. கேரள அரசியலில் இருந்து உம்மன் சாண்டியை காங்கிரஸ் தலைமை தள்ளி வைக்கவும் இதுவே காரணமாக இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பமாக சரிதா நாயர், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் அளித்தார்.

கேரளா கேஸ்
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் முக்கியமாக அப்போதய முதல்வர் உம்மன் சாண்டியின் அரசு இல்லத்திலேயே தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சரிதா நாயர் புகார் கொடுத்தார். இந்த நிலையில்தான் உம்மன் சாண்டி இருந்த முதல்வர் இல்லத்தில் இன்று சிபிஐ அமைப்பினர் ஆய்வு செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் உள்ளது. இந்த வழக்கில் சரிதா புகாரில், கடந்த 2012 செப்டம்பர் 9ம் தேதி உம்மன் சாண்டி தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அளித்தார்.

காங்கிரஸ்
பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதும் அவர் புகார் வைத்தார். இதன் அடிப்படையில் முதல்வர் இல்லத்தில் சிபிஐ சோதனை செய்தது. ஆனால் இப்போது முதல்வராக பினராயி விஜயன் இருக்கிறார். இதனால் அவரின் வீட்டில் சோதனை நடத்தும் முன் முறையாக அனுமதி பெற வேண்டும். அதன்படியே முதல்வர் பினராய் விஜயனின் அனுமதியோடு சிபிஐ அமைப்பினர் நேற்று அவரின் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் பினராயி விஜயன் வீட்டில் இல்லை.

முழு ஒத்துழைப்பு
அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்காவில் அவர் சிகிச்சைக்காக தங்கி இருக்கிறார். இந்த விசாரணைக்கு பினராயி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று சிபிஐ கூறியதும் உடனே விசாரணை மேற்கொள்ள பினராயி அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் வீட்டில் இருந்து உம்மன் சாண்டிக்கு எதிராக இருக்கும் சில முக்கியமான ஆவணங்களை அங்கிருந்து சிபிஐ அதிகாரிகள் எடுத்து சென்றதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications