12ம் வகுப்பு CBSE தேர்வு முடிவு: சென்னையை பின்னுக்கு தள்ளிய திருவனந்தபுரம்! கடைசி இடத்தில் உபி
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி தொடங்கி மார்ச் மாதம் வரையும், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் வரையிலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in என்கிற வெப்சைட்டில் தெரிந்துக்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 87.98% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.65 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல், இந்த ஆண்டு மாணவிகள் 91.52 சதவீதம் பேரும், மாணவர்களில் 85.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை விட 6.40% குறைவு. 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 1,00,016 ஆயிரம் மாணவர்கள் 90% மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
மண்டல வாரியாக பார்த்தால் சென்னையை விட கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம் அதிக தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மண்டலம் கடைசி இடம் பிடித்திருக்கிறது.
திருவனந்தபுரம் மண்டலம்: 99.91%
விஜயவாடா 99.04%
சென்னை 98.47%
பெங்களூரு - 96.95%
மேற்கு டெல்லி - 95.64%
கிழக்கு டெல்லி - 94.51%
சண்டிகர் - 91.06%
பஞ்ச்குலா - 90.26%
புனே - 89.78%
அஜ்மீர் - 89.53%
பிரயாக்ராஜ் - 78.35%
கடந்த ஆண்டும் கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம்தான் முதலிடத்தை பிடித்திருந்தது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த முடிவுகளும் வெளியாகியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications