எர்ணாகுளம் நீதிபதியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.. தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியான வழக்கில் நீதிபதியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது. நீதித்துறை சார்ந்த முடிவுகள் பொதுமக்களின் கருத்துக்களுக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அடிபணியக் கூடாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சேரநல்லூர் பகுதியில் 56 வயதான ஜெயபாலகிருஷ்ணன் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை ஓட்டலை மூடிவிட்டு, தனது ஸ்கூட்டரில் அரிசி மூட்டையை ஏற்றி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த சொகுசு கார், திடீரென ஸ்கூட்டர் மீது அதிவேகமாக மோதியது.

Cheranalloor car accident

இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சேரநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது 17 வயது சிறுவன் என்பதும், அதிவேகமாக காரை ஓட்டி வந்து ஸ்கூட்டர் மீது மோதியதும் தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனின் தந்தை எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதும், பெற்றோருக்கு தெரியாமல் சிறுவன் காரை எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவர்கள் மோட்டார் சைக்கிளோ அல்லது காரோ ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். அதன்படி, இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தையான நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் எழுந்தன. இந்த விவகாரம் கேரளாவில் உச்சகட்ட விவாதமாக மாறி உள்ளது. ஏனெனில் கைதான சிறுவன் உடனே ஜாமீனில் வெளியே வந்தததை பலர் ஏற்க மறுத்து விவாதித்து வருகிறார்கள். உணர்ச்சி பூர்வமாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் போலீசார் தரப்பில், சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்தது. அதன்படி, நீதிபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் பலியான ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் நீதி கேட்டு சேரநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த சிறுவனை போலீசார் மீண்டும் பிடித்தனர். ஆனால் சிறார் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதனிடையே ஜெயபாலகிருஷ்ணனின் மகள் கூறும்போது, எனது தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன். நீதிபதியோ அல்லது அவரது மகனோ இந்த சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க அனுமதிக்க மாட்டேன். காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீதிபதியின் மகன் என்பதால், காவல்துறை சிறுவனுக்கு சாதகமாக செயல்பட்டனர். சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இத்தகைய சம்பவங்கள் சாதாரணமானது என்று மாற்றப்பட்டு வருகிறது. அவர்கள் சிறுவர்கள் என்பதால், கடுமையான குற்றங்களை செய்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார.

இந்த சூழலில் கேரள உயர் நீதிமன்றம், சேரநல்லூரில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையான கூடுதல் அமர்வு நீதிபதியை கைது செய்வதற்குத் தடை விதித்துள்ளது. கூடுதல் நீதிபதி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, அவர் ஒரு நீதிபதி என்பதையும், ஏற்கனவே விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து, விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், அவரை கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்குமாறும், விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகுமாறும் நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதித்துறை சார்ந்த முடிவுகள் பொதுமக்களின் கருத்துக்களுக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அடிபணியக் கூடாது என்று வலியுறுத்திய உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விரிவான வாதங்கள் பின்னர் தொடரும் என்று தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+